வெள்ளி, 21 டிசம்பர், 2018

உபி .. டிசம்பர் 15 முதல் மார்ச் 15 வரை கான்பூர் உன்னாவோ மாவட்டங்களில் இறைச்சி தடை .3 லட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவில் ..


Sadhu Sadhath : முட்டாள்களிடம் நாட்டை ஒப்படைத்தால் இப்படித்தான்..
அதிகாரத்தின் அட்டூஷியங்கள் ...
கான்பூர் உன்னாவோ ஆகிய இரண்டு மாவட்டங்களில் டிசம்பர் 15 முதல் மார்ச் 15 வரை டேனரிகள் , ஸ்லாட்டர் ஹவுஸ்,மற்றும் மீட் ப்ராசசிங் சென்டர்கள் இயங்க கூடாது என்று தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது உபி மாநில அரசு .. கும்பமேளாவை காரணம் காட்டி ஏற்கனவே திருமணம் செய்ய தடைவிதித்திருந்தது தெரிந்தது தான் . அதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவும் வந்திருக்கிறது ..
அதனால் என்ன என்று கேட்டால் .. இதனால் நேரடியாக 300,000 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்க்கிறார்கள்
ஸ்லாட்டர் ஹவுஸ் ஆடு மாடுகளை வெட்டும் அறுவைக் கூடங்கள் இதில் எல்லோருமே தினக்கூலிகள் அன்றன்று வரும் வருமானமே அவர்கள் சொத்து .. அந்த ஸ்லாட்டர் ஹவுசிலிருந்து வரும் எலும்புகளை கொண்டுதான் சர்க்கரையை சுத்தப்படுத்தப் படுகின்றன .. பீங்கான் உற்பத்தி , கோட்டுகளில் தைக்கப்படும் பெரிய பெரிய பட்டன்கள் என ஒரு தொழில் சங்கலியே பாதிப்புக்குள்ளாகும் ..

மீட் புராசசிங் இங்குதான் வெட்டப்பட்ட ஆடு மாட்டின் இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறது .. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் .. அதை கொண்டு சேர்க்கும் ட்ரான்ஸ்போர்ட் ஊழியர்கள் .. ஏற்று இறக்கு கூலிகள் என்று எல்லோரும் இன்று நடுத்தெருவில் .. அத்தோடு அந்நிய செலவானி குறையும் .. சப்ளை சரியாக இல்லை என கான்ட்ராக்ட் கேன்சலாகி பங்களாதேஷுக்கோ பாகிஸ்தானுக்கோ கான்ட்ராக்ட்கள் இடம்மாறும் ..
டேனரிங்க் யூனிட்கள் இங்கு தான் ஆடு மாடுகளின் தோல்கள் பதப்படுத்தப்படுகிறது .. இங்கும் 90% தினக்கூலிகளே பாதிக்கப்படபோகின்றனர் .. இங்கிருந்து தோல்கள் வந்தால்தான் .. பெல்ட் பர்ஸ் ஜெர்கின் ஷூ செருப்பு , கிளவுஸ்கள் , ஹேண்ட் பேக்குகள் என பலவும் தயாரிக்க முடியும் ..
தோல் பொருள்கள் உற்பத்தி செய்யும் டைலர்கள் பேஸ்டர்கள் பேக்கிங்க் செக்கர்கள் .. அதை கொண்டு போக ட்ரான்ஸ்போர்ட் கூலிகள் , என எல்லோரும் வேலையிழந்து தெருவில் ... இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் காண்ட்ராக்டை கேன்சல் செய்து வேறு நாடுகளுக்கு போகும் ... மீண்டும் மூன்று மாதம் கழித்து வெளிநாட்டு நிறுவனங்களின் ஆர்டர் பெறுவது சாமானியமான வேலையா .. ஆர்டர் கிடைத்தால் தானே மீண்டும் மேற்படி அனைத்து நிலையிலான தொழிளாலர்களுக்கும் வேலை கிடைக்கும் ...
இந்த முட்டாள்தனமான உத்தரவினால் மாதம் ஒன்றுக்கு 4000 கோடிக்கு தொழில் பாதிப்பும்.. அந்த தொழிளாலர்களால் வணிக ரீதியாக பயன்பெற்ற பெட்டிக்டை முதல் மளிகை கடை வரையிலான மறைமுக பாதிப்புகளை எல்லாம் கணக்கில் கொண்டால் பல லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை சீரழியும் ..
இதில் காமெடி மாநிலத்தில் உள்ள பீஜேபீ அரசை மத்திய பீஜேபீ அரசின் காமரஸ் துறை இந்த தடையை விலக்கிக்கொள்ள வேண்டுகோள் விடுத்திருப்பதுதான் ..
இதில் புரியாத விசயம் இதில் பாதிக்கப்பட்ட பாதிக்கு பாதி அவ்வளவு கூட வேண்டாம் மூன்றில் ஒரு பங்கு அதாவது 100,000 பேர் தலித்துகள் .. இதைப்பற்றி அதே உபியின் மாயாவதி கண்டுகொள்ளவே இல்லை ஏன் என்பது அந்த சிபிஐக்கே வெளிச்சம் .. .
நேற்று திருமணம் கூடாது என்றான் , இப்போது வேலையும் கிடையாது என்கிறான் .. நாளை புருசன் பொஞ்சாதி ஒன்றாக இருக்க கூடாது என்பான் நல்லதாச்சு என்று பாம்பே சென்று ஆபரேசன் செய்து கொள்வார்களா இல்லை அதுக்காவது எதிர்த்து கேள்வி கேட்குமா இந்த ஊடகமும், சமுதாயமும் என்று தெரியவில்லை ..

கருத்துகள் இல்லை: