கருஞ்சட்டை பேரணியின் உள்நோக்கம் |
மேலிருந்து கீழாக....
உதாரணத்திற்கு : இருக்கும் இடம் தெரியாமல் முடங்கிக் கிடந்த ஓபிஎஸ் இபிஎஸ் போன்றவர்களை கோபுரத்தில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது...
இவைகளெல்லாம் எத்தனை நாள்களுக்கு என்று தெரியாது அது போல தான் புதிய புதிய புரட்சியாளர்களும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
2009 தமிழக அரசியலில் ஈழப் போர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அந்த தாக்கத்தின் பின்னணியில் இந்துத்துவ ஆட்கள் இருக்கிறார்கள் என்று நமக்கு சந்தேகம் இருந்து கொண்டு இருந்தாலும், அதை சமீபத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அதுபோல்தான் முற்போக்கு தளத்திலும் பல்வேறு போலிகளும், காலிகளும் சமூக மாற்றத்திற்கான தளத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்,
பல முற்போக்கு பேசும் புரட்சியாளர்கள் புற்றீசல்கள் போல் புதிது புதிதாய் 2009 இல் இருந்து கிளம்பி வந்துகொண்டே இருக்கிறார்கள் இவர்களாக வருகிறார்களா அல்லது இவர்களை யாராவது அனுப்பிவைக்கிறார்களா என்பது மிகப்பெரிய குழப்பம்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி IT விங் என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் இவர்கள் அரசியல் அனாதை ஆகியிருப்பார்கள்
ஆனாலும் இவர்களின் நடவடிக்கை அப்பட்டமாக இவர்கள் யார் என்பதை காட்டிவிடுகிறது. பல்வேறு சமயங்களில் தன்னையறியாமல் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களின் நோக்கம் எல்லாம் எப்படியாவது இடைவெளி இருக்கும் முற்போக்கு தளத்தில் மூக்கை நுழைத்து உள்ளே புகுந்து அந்த தளத்தையே சீரழிப்பது அல்லது நீர்த்துப் போகச் செய்வது.
சீமான்,
கி ஆ பெ விசுவநாதன் போலவும், ஆதித்தனார் போலவும், மா.பொ.சி போலவும் அப்பட்டமாக அம்பலப்பட்டு, நிர்வாணமாய் நிற்கிறார்..!
கட்டமைப்பை உண்டாக்கிவிட்டாகி விட்டது, இனி என்ன செய்வது ஒரு சீட்டு, இரண்டு சீட்டு கிடைத்தால் சட்டசபையில் உட்கார்ந்து தன் காலத்தை ஓட்டிவிடலாம்...
இதைத்தான் சீமானின் முன்னோர்கள் செய்தார்கள். நாளை இதைத்தான் சீமானும் செய்யப்போகிறார் காரணம் சீமானின் தவறான அணுகுமுறை தமிழகத்தில் பெரியாரை மீறின அரசியல் எடுபடாது என்று புரிந்துக் கொண்டார்கள் சீமானை அனுப்பிவைத்தவர்கள்.
சீமானை அனுப்பி பார்ப்பனர்கள் ஒரு படிப்பினையை கற்றுக் கொண்டார்கள் சீமான் ஒரு சோதனை முயற்சிதான்...
பாடம் கற்றுக் கொண்ட ஆர்எஸ்எஸ் காரர்கள், நெருப்பை தண்ணீர் கொண்டு அணைக்க முடியாது என்று புரிந்துகொண்டு, நெருப்பை நெருப்பால் அணைக்கும் உத்தியை கடைபிடிக்கிறார்கள்...
நெருப்பால் நெருப்பை அணைக்கும் பார்ப்பனர்களின் தந்திர உத்தி தான் பெரியாரிய முற்போக்கு தளத்தில் பெரியாரியலைக் கொண்டே ஊடுருவுவது.
அப்படி பார்ப்பன பயங்கரவாதிகளால் ஊடுருவ வைக்கப்பட்ட நபர்தான் திருமுருகன் காந்தி இதை எந்த அளவிற்கு பெரியாரிய பேராசான்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தோழர் கொளத்தூர் மணி ஆகட்டும் தோழர் கோவை இராமகிருட்டிணன் ஆகட்டும், ஆசிரியர் வீரமணி ஆகட்டும் இதை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை.
ஆனால் மிக கவனமாக திட்டமிட்டு ஊரில் எவனோ கூட்டிய கூட்டத்தை எல்லாம் தான் கூட்டியது போல் தனக்குத் தானே ஒரு ஒளிவட்டம் போட்டுக்கொண்டு சுற்றி வருகிறார் திருமுருகன் காந்தி.
இந்த மண்ணில் ஒரு கடுகளவு கூட பணி செய்திராத, எந்த தியாகத்தையும், எந்த உழைப்பையும் சிந்தாத வெறும் இணையத்திலும், சுவரொட்டிகளிலும் மட்டும் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் திருமுருகன் காந்தி வழக்கமான தன்னுடைய தந்திர உத்தியின் மூலம் பெரியாரின் பொது தளத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறார்.
ஆசிரியர் வீரமணி அவர்களும், கொளத்தூர் மணி அவர்களும், கோவை இராமகிருட்டிணன் அவர்களும் சிந்திய உழைப்பு அளப்பரியது. அவர்கள் செய்த தியாகங்கள் எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் ஈடுகட்ட முடியாதது.
இப்படி அளப்பரிய தியாகத்தையும் உழைப்பையும் சிந்தி ஒரு பெரியாரிய பண்பாட்டு கருத்தியலை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் பெரியாரை கடந்து அவர்கள் பேசிவிட முடியாது, அல்லது எவ்வளவுதான் முயன்றாலும் தமிழ்நாட்டில் இந்துத்துவா காலூன்றி விட முடியாது, என்கின்ற நிலையை மேலே குறிப்பிட்ட மூலவர்கள் தான் உருவாக்கினார்கள்.
இந்த மண்ணை இந்துத்துவாவின் கல்லறையாக மாற்றிய நன்றிக்குறியவர்கள், இன்றுவரை இவர்களுக்கு இணையான ஒரு தலைவரை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
காரணம் அவர்களின் தியாகமும், உழைப்பும் என்றென்றும் போற்றுதலுக்குறியது, பெரியார் இவ்வளவு நெருக்கடியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு மேலே நாம் குறிப்பிட்ட மூலவர்கள் தான் காரணம்.
ஆனால் இன்று வருகின்ற துண்டுபிரசுரம் ஆகட்டும், சுவரொட்டிகள் ஆகட்டும், மற்ற விளம்பரங்கள் ஆகட்டும் ஆசிரியர் வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், இவர்கள் வரிசையில் திருமுருகன் காந்தியும் இடம்பெறுகிறார்,
எந்த உழைப்பும் சிந்தாமல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..?
ஆனால் நாம் ரஜினியையும், கமலையும் கேட்கிறோமே..? இந்த மக்களுக்காக இதுவரை நீ என்ன கிழிச்சே நேரே முதல்வராவதற்கு என்று..?
ஆனால் இதே கேள்வியை நாம் திருமுருகன் காந்தியிடம் கேட்கத் தவறுகிறோமே நீ என்ன இந்த மக்களுக்கு உழைச்சே என்று..
மேலே குறிப்பிட்ட மூன்று தலைவர்களும் முன்னிலையில் இருக்கிறார்கள், முதிர்ந்த வர்களாகவும் இருக்கிறார்கள் அந்த இடத்தை, அந்த வரிசையை பறிக்க முயற்சிக்கிறார்,
எவ்வளவு பெரியஜாம்பவான்களும் அசைக்க முடியாத பெரியாரியலை பெரியாரிய ஆயுதத்தைக் கொண்டே அறுப்பதற்காக இந்த முற்போக்கு தளத்தில் ஊடுருவ வைக்கப்பட்ட நபர்தான் திருமுருகன் காந்தி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்றுகள் வேண்டியிருக்கிறது.
வழக்கமாக யாரோ கூட்டிய கூட்டத்தை தனது கூட்டமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும்... எண்ணிக் கூறினாள் 150 நபர்களை தாண்டாத மே 17 இயக்கம்...
ஆயிரக்கணக்கான நபர்களை மற்றவர்கள் உழைப்பில் திரட்டி அதை தனது பட்டாபிஷேகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் மலிவான தந்திர உத்தி தான் பெரியாரி
இந்த பேரணி மாநாடு என்பது வரவேற்க கூடியது, வாழ்த்த கூடியது ஆனால் இப்படி கூடுகின்ற கூட்டம் யாருக்கு பயன்படும், இதை யார் அறுவடை செய்யப் போகிறார்கள்..? வழக்கம்போல் திருமுருகன் காந்தி முற்போக்கு தளத்தில் முன்னிலை வகிக்கவே பயன்படும்.
அவரும் தன்னை ஒரு கதாநாயகனாக உயர்த்திக்கொள்ளவும் மேலே குறிப்பிட்ட பெரியாரிய பேராசான்களான தலைவர்கள் வரிசையில் தன்னை இணைத்துக்கொள்ளவும்தான் பயன் படும்.
நூற்றுக்கணக்கான இயக்கங்களின் உழைப்பையும், வியர்வையையும், பணத்தையும் லாவகமாக தன் ஒளிவட்டத்தை பெருக்க பயன்படுத்திக்கொள்கிறார் திருமுருகன் காந்தி, இந்த சூட்சுமம் தெரியாமல் பெரியாரிய பேராசான்கள் மதி மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள்...
இப்படித்தான் இதே பெரியாரிய பேராசான்கள் சீமானை வளர்த்து விட்டார்கள் அனுபவிக்கிறார்கள்..!இப்போது திருமுருகன் காந்திக்கு கொம்பு சீவி விடுகிறார்கள்..!
இதன் விளைச்சலை அவர்கள் அனுபவிப்பது மட்டுமல்ல, தேசத்திற்கு ஒரு தவறான நபரை அடையாளம் காட்டுகிறார்கள்...!
பெரியாரின் உழைப்பைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தி திரு முருகன் காந்தியின் காலடியில் கொண்டு போய் வைக்க வேண்டிய அவசியமும், அவசரமும் என்ன வேண்டி கிடக்கிறது என்ற கேள்வியும் அச்சமும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த மாநாடும், பேரணியும் அவசியமா என்றால் அவசியம்தான் இந்துத்துவாவிற்கு எதிராக நாம் ஒன்று கூட வேண்டுமா என்றால் கூட வேண்டும் தான்... இந்துத்துவாவை வேறறுக்க வேண்டுமா என்றால் கட்டாயம் வேறறுக்க வேண்டும்தான்.
ஆனால் இந்த பேரணி, மாநாடு எதற்காக பயன்படுகிறது என்பதில்தான் நாம் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.
எப்பொழுதுமே தூய பெரியாரிஸ்டுகள் மட்டும் என்பதும், கொடிகளை பயன்படுத்த வேண்டாம் பொதுவில் கூடலாம் என்பதும், (பல நிர்பந்தத்திற்கு பிறகு இப்போது கொடியை பயன்படுத்தலாம்).
தேர்தல் கட்சிகளை, மதச் சிறுபான்மை கட்சிகளை தவிர்த்துவிட்டு சுத்தமான பெரியாரிஸ்டுகள் மட்டும் கூடுவது என்பது எதை குறிக்கிறது..?
அனைத்து கட்சிகளிலும் பெரியாரிஸ்டுகள் கிடையாதா? அல்லது அவர்கள் பெரியாரிஸ்டுகள் கிடையாதா? அடுத்தபடியாக மத சிறுபான்மையாக இருக்கக்கூடிய இஸ்லாமிய, கிறிஸ்தவ இயக்கங்களிலிருந்து கட்சிகளிலிருந்து அவர்களின் சக்தியையும் இந்த கூட்டத்திற்கு பயன்படுத்தினால் நாம் திட்டமிட்ட, இந்துத்துவாவிற்கு எதிரான ஒரு லட்சம் நபர்கள் என்கின்ற இலக்கை இலகுவாக எட்டிவிடலாமே..!
ஆனால் ஏன் அதை கவனமாக அவர்கள் தவிர்த்தார்கள், காரணம் இந்த மேடையில் ஆசிரியர் வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், இவர்களைத் தவிர்த்து விட்டு பார்த்தோமானால்...
நூற்றுக்கணக்கான கட்சிகள் என்று சொல்லக்கூடியவர்கள் பெரிய ஆளுமைகள் கிடையாது, எனவே நூற்றுக்கணக்கான கட்சிகளின் உழைப்பை ஏமாற்றி விடலாம்..!
மேலே குறிப்பிட்ட பெரியாரிய மூலவர்களாக இருக்கக்கூடிய ஆசிரியர் வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் போன்றவர்களை இலகுவாக இணங்க வைத்துவிட்டு அவர்களுக்கு இந்துத்துவா என்கின்ற இலக்கை கொடுத்துவிட்டு...
பெரியாரிய முற்போக்காளர் வரிசையில் நிரந்தரமாக சம்மணமிட்டு அமர்ந்துக் கொள்ளலாம் என்கின்ற மலிவான அரசியல் குயுக்திதான் காரணம்.
மற்ற கட்சிகளையும், மதச் சிறுபான்மை கட்சிகளையும் விலக்கி வைக்க திருமுருகன் காந்தி செய்த மலிவான தந்திரம். அதுமட்டுமல்ல மற்ற கட்சியினரும், மத சிறுபான்மையினரும் இதில் பங்கு பெற்றால் அவர்களின் ஆளுமைக்கு முன் திருமுருகன் காந்தி இருக்கும் இடம் தெரியாமல் ஒரு மூலையில் தள்ளப்படுவார்...
தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான கட்சிகளின், இயக்கங்களின் உழைப்பையும், வேர்வையையும் தன் சுய விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக நைச்சியமாக, தந்திரமாக மற்ற கட்சிகளை ஒதுக்கிவிட்டு...
பெரியார் என்கிற கோட்பாட்டை முன்னிறுத்தி தனக்கான ஒளிவட்டத்தை தேடிக்கொள்ள இந்த பேரணி மாநாட்டைப் பயன் படுத்திக் கொள்ளப் போகிறார்...
இன்னும் ஐந்தாண்டு அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து எப்படி சீமானை இன்று நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோமோ அதுபோல திருமுருகன் காந்தியையும் எதிர்த்து இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயத்தையும் பெரியாரிய பேராசான்களே உறுவாக்கி விட்டார்கள் என்கின்ற வரலாற்று பலி அவர்களையே சாரும்...
பிறகு தான் பேசுவார்கள் ஐயோ சீமானை போல திருமுருகன் காந்தியும் உளவுத் துறையைச் சேர்ந்தவர் தானா என்று... அப்பொழுது நாம் சொல்லுவோம் இதைத்தான் ஐயா நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கிட்டு இருந்தோம்...
வருமுன் காப்போம்..! போலிகளை அம்பலப்படுத்துவோம் ! 2 ஜி போலி குற்றச்சாட்டுக்கு பக்க பலமாக ஒத்து ஊதிய பாசிச சக்திகள் இப்போது பெரியார் தோல் போர்த்திக்கொண்டு வருகிறது?
#சுட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக