ஞாயிறு, 14 அக்டோபர், 2018

130 பயணிகளின் உயிரோடு விளையாடிய ஊழியர்கள்- திருச்சி விமான விபத்து விசாரணையில் திடுக்கிடும் தகவல்


130 பயணிகளின் உயிரோடு விளையாடிய ஊழியர்கள்- திருச்சி விமான விபத்து விசாரணையில் திடுக் தகவல்
201810131250429647_1_trichyairport0000._L_styvpf 130 பயணிகளின் உயிரோடு விளையாடிய ஊழியர்கள்- திருச்சி விமான விபத்து விசாரணையில் திடுக் தகவல் 130 பயணிகளின் உயிரோடு விளையாடிய ஊழியர்கள்- திருச்சி விமான விபத்து விசாரணையில் திடுக் தகவல் 201810131250429647 1 trichyairport0000
மாலைமலர் :திருச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. 130 பயணிகளின் உயிரோடு விளையாடிய ஊழியர்கள்- திருச்சி விமான விபத்து விசாரணையில் திடுக் தகவல்
விபத்தில் சிக்கிய விமானத்தின் சக்கரத்தில் கம்பி வலை சிக்கியிருப்பதையும், அடிப்பாகம் சேதமடைந்திருப்பதை காணலாம்.< திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து உயரே எழுந்தபோது திடீரென தாழ்வாக பறந்து ஓடு தளத்தின் அருகில் இருந்த சிக்னல் ஆண்டனா,
இரும்பு கம்பிகளை உடைத்துக் கொண்டும் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலைக்கும், விமான நிலையத்திற்கும் இடையே கட்டப்பட்டுள்ள 12 அடி உயர காம்பவுண்ட் தடுப்புச்சுவரில் மோதி உடைத்துக் கொண்டும் பறந்து சென்றது.
விமானம் மோதியதில் 5 சிக்னல் ஆண்டனா, ஓடுதளம் மின்விளக்குகள், ஓடுதளத்திற்கும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இணைப்பாக இருந்த கட்டுப்பாட்டு கருவி ஆகியவையும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள பாகம் உடைந்தது. விமான சக்கரங்கள் வானில் விமானம் பறக்கும் போது எரியும் சிக்னல் விளக்குகளும் சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக விமானம் பெரிய விபத்தில் சிக்காமல் துபாயில் தரையிறக்காமல் மும்பையில் தரையிறக்கப்பட்டு 130 பயணிகளும் அவர்களுடன் பயணித்த பைலட் கணேஷ் பாபு, கோ-பைலட் அனுராக் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் உள்பட 136 பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேதம் அடைந்த விமானத்துடன் 130 பயணிகளுடன் 5 மணி நேரம் வானில் பறந்த நிகழ்ச்சி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது பயணிகளின் உயிரோடு விளையாடியது போல் உள்ளதாக விமான பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்திற்கு காரணம் என்ன? என கண்டுபிடிக்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், வான்வழி போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி டெல்லி மற்றும் சென்னையில் இருந்து விசாரணை நடத்த அதிகாரிகள் இன்று திருச்சி விரைந்தனர்.
நள்ளிரவு 1.19 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 1.20 மணிக்கு விபத்தில் சிக்கியுள்ளது. அப்போது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புறப்பட்டுள்ளது.
விமானம் மோதிய போது இரும்பு கம்பிகள் உடைந்ததையும், காம்பவுண்ட் சுவர் உடைந்ததையும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்து 20 நிமிடத்திற்குள் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் நடுவானில் பெங்களூர் அருகே சென்று கொண்டிருந்த விமான பைலட் கணேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசி விமானம் மோதியது குறித்து தெரிவித்துள்ளனர்.
அப்போது கணேஷ்பாபு மோதிய நிகழ்வு தனக்கு தெரியவில்லை என்றும் ஆனாலும் விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று விமான காக்பிட் அறையில் உள்ள கருவிகள் காட்டுவதாகவும் எனவே விமானத்தை தொடர்ந்து தான் இயக்குவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விமானம் மோதியதில் உடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.
இந்த உரையாடல் விபத்து நடந்த 20 நிமிடத்திற்குள் நடந்ததா? அல்லது விமானம் பல மணி நேரம் பறந்த பிறகே விபத்து குறித்து பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விமானம் மோதிய போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் விமான பணியாளர்களிடம் கேட்ட போது அது சாதாரணமானது தான் என தெரிவித்துள்ளனர்.
இந்த உரையாடல் விவகாரங்கள் பைலட் அறையில் உள்ள கருவிகளில் பதிவாகியிருக்கும். அதை விசாரணைக்குழு ஆய்வு செய்யவுள்ளது.
விமானம் விபத்தில் சிக்கியது குறித்து தெரியாத பைலட்டும், விமான ஊழியர்களும், விமானத்தை தொடர்ந்து பறக்க செய்து பயணிகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது ஏன்? என்ற விசாரணையையும் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் 8,169 அடி நீளமுள்ள ஓடுதளத்தில் குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு விமானம் வானில் ஏற வேண்டும். ஆனால் பைலட் அதிக தூரம் ஓடுதளத்தில் சென்று டேக் ஆப் செய்ததால் புதுக்கோட்டை சாலை அருகே உள்ள சிக்னல் ஆண்டனா மற்றும் காம்பவுண்ட் சுவர் மீது மோதியதாக ஒரு காரணம் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சென்னையை சேர்ந்த பைலட் கணேஷ்பாபு தனது பணிக்காலத்தில் இதுவரை 3,600 மணி நேரம் பயணித்த அனுபவம் உள்ளவர். விபத்து நடந்த விமானத்தில் அதிக அளவில் சரக்குகள் ஏற்றப்பட்டதால் எடை அதிகரித்து விமானம் வானில் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டு விபத்து நடந்ததாகவும் ஒரு காரணம் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விமான பதிவேடு விபரத்தை கைப்பற்றி விசாரணை நடைபெறவுள்ளது. பைலட், பணியாளர்கள், பயணிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், விமானம் காம்பவுண்ட் சுவரில் மோதிய போது கற்கள் தெறித்ததில் அந்த வழியாக காரில் சென்ற போது காயம் அடைந்த திருவாரூர் மணிமாலா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விமானத்தின் அடிப்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் நடுவானில் விபத்து ஏற்பட்டிருந்தால் தங்கள் கதி என்னவாகியிருக்குமோ? என அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உறவினர்களிடமும், பேஸ்புக் மூலம் தங்கள் உணர்வை பீதியுடன் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: