தினத்தந்தி :அக்டோபர் 19, 2018 09:07 AM
பம்பை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது. கோவிலுக்கு செல்ல முயற்சி செய்யும் பெண்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீஸ் தெரிவித்தது. இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் கோவிலுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டு உள்ளார்கள்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர். சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் இருவரும் அடைந்தனர்.
அவர்களுடைய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து, சன்னிதானம் அருகே ஐயப்ப பக்தர்கள் முழக்கமிட்டு வரும் நிலையில் போலீசார் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இரு பெண்களையும் கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் பேசப்படுகிறது. இரு பெண்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளன<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக