தினமணி : சேலம் அருகே உள்ள
கே.மோரூர் அரசு
தொடக்கப்பள்ளியில்
தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை சத்துணவு சமைக்க விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவத்தில் தீண்டாமை கொடுமை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகிலுள்ள கணவாய்ப்புதூர் என்ற ஊராட்சிக்குட்பட்ட கே.மோரூர் அரசுப் பள்ளியில் சமையல் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஜோதி (46). இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற நிலையில், அதே ஊராட்சிக்குட்பட்ட குப்பன் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நியமனம் செய்யப்பட்டார். இந்தப் பள்ளியில், 50 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஜோதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அவர் சமையல் செய்தால், நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று மாணவர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில், ஜோதி சமைக்கும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் சேகர், வட்டார
வளர்ச்சி அலுவலகரிடம் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதற்கு
எந்த பலனும் கிட்டவில்லை. எனினும், இது தொடர்பாக விடுதலை சிறுத்தை
கட்சியின் மாவட்ட செயலாளரிடம் கூறியுள்ளனர்.
இதனிடையே, தொடர்ந்து சமைத்து வரும்,
ஜோதிக்கு எதிராக ஒரு பிரிவினரும், ஆதரவாக ஒரு பிரிவினரும் திவட்டிப்பட்டி -
பொம்மிடி சாலையில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து,
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஜோதியை சமைத்தால், மாணவர்களை பள்ளிக்கு
அனுப்ப மாட்டோம் என்று கூறி வரும் பெற்றோர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்துள்ளனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
போலீஸார் கூறியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீண்டாமை தொடர்பாக பள்ளி
ஆசிரியர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து நிலையில், தீண்டாமை கொடுமை
வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கே.மோரூர் அரசுப்
பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம்
மாவட்டத்தில் தீண்டாமை பிரச்னைகள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்படும்
என மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக