தினத்தந்தி :செய்தியாளர் பிரியா ரமணிக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய வெளியுறவ துறை இணை
மந்திரியாக பதவி வகித்து வரும் எம்.ஜே.அக்பர் பத்திரிகைகளில் ஆசிரியராக
பணியாற்றியபோது, சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக
தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் தற்போது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு
செய்தியாளர்கள் உள்பட 11 பெண் பத்திரிகையாளர்கள் புகார் கூறி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை
பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக
எம்.ஜே. அக்பர் வழக்கு தொடர்வேன் என்று கூறிய போதே பிரியா ரமணி
பேசுகையில், “எந்தஒரு அவதூறு வழக்கிலும் உண்மைதான் மகத்தான பாதுகாப்பு.
நான் கவலைப்படப்போவது கிடையாது,” என்று கூறிவிட்டார்
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக
முதல்முறையாக பாலியல் புகாரை தெரிவித்தது பத்திரிக்கையாளர் பிரியா
ரமணிதான். 2017-ம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டினார்.
பணியிடத்தில் நேரிட்ட தொல்லை தொடர்பாக பெயர் தெரிவிக்காமல் கட்டுரையை
எழுதினார், இப்போது கட்டுரையில் எம்.ஜே. அக்பரைதான் குறிப்பிட்டேன் என
கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக மவுனம் காத்த எம்.ஜே. அக்பர்,
வழக்கறிஞருடன் ஆலோசனையை மேற்கொண்டு நடவடிக்கையை எடுப்பேன் என கூறினார்.
இந்நிலையில் செய்தியாளர் பிரியா ரமணிக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக