மாலைமலர் :சபரிமலை பகுதியில் நடைபெற்று வரும்
வன்முறைப் போராட்டத்தில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக
தெரியவந்துள்ளது.
பத்தனம்திட்டா
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால், அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. சபரிமலை செல்லும் பாதைகளில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த வன்முறை மற்றும் தடியடியில் 5 பக்தர்கள், 15
போலீசார் காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கேரள
அமைச்சர் ஜெயராமன் கூறினார்.n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக