வெள்ளி, 19 அக்டோபர், 2018

சபரிமலை ரவுடி ராகுல் ஈஸ்வர தாந்திரியின் பாஜக பின்னணி .. ஒரு flashback

Image may contain: one or more people
Prakash JP : வயது வேறுபாடின்றி, பெண்கள், சபரிமலை சன்னிதானம் சென்று, தர்ம சாஸ்த்தாவை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், எப்போதும் அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன..
ஆனால், உண்மை அது தானா?
2012-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்6-ம் தேதி, மலையாள பத்திரிகைகள் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன. 

ஆபிரகாம் தடியூர் என்ற மலையாள பத்திரிகை நிருபர், இப்போது, அந்த செய்தியையும், அதன் பின்னர் நிகழ்ந்தவற்றையும் நினைவு கூர்கிறார்...
"அன்று, சபரிமலை சன்னிதானத்தில், சில பெண்கள் கூட்டமாக வந்து, தர்ம சாஸ்த்தாவை தரிசித்ததை கண்டேன்; அந்த பெண்களுக்கு, போலீஸ் காவல் இருந்தது.. பத்திரிகையாளர் எவரையும், புகைப்படங்கள் எடுக்க, முதலில் அனுமதிக்கவில்ல; ஆனாலும், நாங்கள், பெரும் பாடுபட்டு, புகைப்படங்கள் எடுத்தோம்.. பத்திரிகைகளில் செய்தியும் வந்தது!

நாங்கள் சபரிமலை தந்திரிகளிடம், விசாரித்த போது, அந்த பெண்கள் அனைவரும், கொல்லம் நகரைச் சேர்ந்த, தொழில் அதிபர், சுனில் சுவாமி என்பவரோடு, மும்பையிலிருந்து வந்த பெண்கள் என்று தகவல் சொன்னார்கள்!

பத்திரிகை செய்திகள் வந்த உடனே, ராகுல் ஈஸ்வர், என்னை தொடர்பு கொண்டு, "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது.. எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை... ஆனாலும், எனது அம்மா, இதை, பிரச்சினை ஆக்க வேண்டாம்;தொழில் அதிபர் சுனில் சுவாமி, நமக்கு வேண்டியவர் என்பதால், இதை இத்தோடு விட்டு விட வேண்டும்"என்று கூறினார்....
இப்போது, சபரிமலையில், பெண்களுக்கு அனுமதி கொடுத்தால், தற்கொலை செய்து கொள்வோம் என்பவர்களோ, அல்லது,
சபரிமலையை, ரத்தக்களரியாக மாற்றி, பெரும் கலவரத்தை தூண்டி விடும், எவரும், சுனில் சுவாமி, தன்னோடு வந்த, பெண்களையும் சேர்ந்து, சன்னிதானத்தில் நுழைந்து,2 நாட்கள், சன்னிதானம், விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து, சடங்குகளை நிறைவேற்றியதையோ, கண்டு கொள்ளவில்லை!
சுனில் சுவாமிக்கு எதிராக, எந்த வாள் முனையும் நீளவில்லை என்பது தான் விசித்திரம்...
இது மட்டுமா?
2032-ம் ஆண்டு வரைக்கும்,"#உதயாஸ்தமய #பூஜை செய்யும், டிக்கட்டுகளை, மொத்தமாக, புக் செய்து விட்டு, சட்டப்படி, இப்போதும், சபரிமலை வந்து செல்கிறார், சுனில் சுவாமி!
இதற்கு எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை....
அவர்களுக்கு தெரியும்...
சர்வ வல்லமை மிக்க சுனில் சுவாமி, யாரென்று.
சுனி சுவாமிக்கு எதிராக, எந்த வாளும் நீளாது..
என்ன காரணம் என்று, சங்கிகளுக்கு நன்றாக தெரியும்...
என்ன காரணம்?
அப்போதைய, பாஜக கேரள மாநில பாஜக தலைவர், இப்போது, ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், சுனில் சுவாமியின், நெருங்கிய நண்பர் என்பது, சங்கிகளுக்கும் தெரியும்; ராகுல் ஈஸ்வருக்கும் தெரியும்.....
யார் இந்த ராகுல் ஈஸ்வர்..?
சபரிமலையில், வன்முறையை, திட்டமிட்டு நிறைவேற்றி, தற்போது, கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்...

கருத்துகள் இல்லை: