மின்னம்பலம்: படுக்கையைப் பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படுவது மீ டூ. தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று அடுக்கடுக்கான புகார்களை கொடுத்துள்ளார். அமலா பால், வரலட்சுமி சரத்குமார், தனுஸ்ரீ தத்தா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசிவருகின்றனர்.
இதனிடையே வடசென்னை திரைப்படத்தின் புரொமோஷனுக்காக பல்வேறு பேட்டிகள், நிகழ்ச்சிகளில் கலந்து வரும் நடிகை ஆண்ட்ரியா இது குறித்து கூறும் போது, “மீ டூ இயக்கத்தை வரவேற்கிறேன். தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பில்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. எனக்கு இது போன்றதொரு அனுபவம் ஏற்படவில்லை.
நான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால், எனக்கும் அவரை பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அதே போன்று தான் அவருக்கும் என்னை பிடித்திருக்கும். அதுதான் உண்மையும் கூட. ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்பதெல்லாம், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம்.
படுக்கையைப் பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. தங்களது வேலைக்காகப் பெண்கள் படுக்கையைப் பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள். பெண்கள் முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி இருந்தால் யாரும் அவர்களை நெருங்க முடியாது. தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் கிட்ட நெருங்கத்தான் செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக