செவ்வாய், 16 அக்டோபர், 2018

சுவிசில் நடந்ததென்ன அதிக பணம் கேட்டு சின்மயியும் தாயும் செய்த கலாட்டா சொல்லி மாளாது ... விடியோ


மின்னம்பலம்: வைரமுத்து மீது சின்மயி வைத்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இசையமைப்பாளர் இனியவன்.
சின்மயி குற்றம் சாட்டிய சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இனியவனின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சின்மயி விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “சுனாமிக்காக வைரமுத்து எட்டு பாடல்கள் எழுதியிருந்தார். அந்த பாடலின் இசை வெளியீட்டு விழாவை சுவிட்சர்லாந்தில் நடத்த சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தார். அந்த எட்டு பாடல்களில் ஒரு பாடலை சின்மயி பாடியிருந்தார். 2005ஆம் ஆண்டு மே 9, 10 தேதிகளில் அங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணிக்க விநாயகம், உன்னி மேனன், சின்மயி மூவரும் கலந்து கொண்டனர். சின்மயிக்கு அந்த நேரத்தில் மாணிக்க விநாயகத்தைவிட குறைவான பணம் கொடுக்கப்பட்டது. அந்த விஷயத்தை சின்மயிடம் மாணிக்க விநாயகம் சொல்லிவிட்டார். இதைத் தெரிந்ததும் அவரும் அவரது அம்மாவும் சேர்ந்து செய்த கலாட்டாவை சொல்ல முடியாது.
அதிலும் சின்மயியின் அம்மா பெரும் பிரச்சினையையே உண்டாக்கிவிட்டார்” என்று இனியவன் கூறினார்.
மேலும் சின்மயி கூறுவது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். “அந்த நிகழ்ச்சி குறித்து வைரமுத்து மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், இவர்கள் ‘யாரோ ஒரு நபர் அழைத்தார்’ என்றுதான் சொல்கிறார்கள்.

அப்போதே வைரமுத்துவிடமோ, என்னிடமோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சுரேஷிடமோ இது பற்றி கூறியிருக்கலாம். அந்த நேரத்தில் ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார். அப்போது சொல்லி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே. இவர்கள் சொல்வது வைரமுத்துவிற்குப் பெரிய பின்னணி இருக்கிறது அதனால்தான் சொல்ல முடியவில்லை என்று. ஆனால் இவர்களுக்கு ஏதோ ஒரு பின்னணி இருப்பதால்தான் இப்படிப் பேசுகிறார்கள்” என்று கூறினார்.
சின்மயி, வைரமுத்துவுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து இனியவன் தனது பேட்டியில் குறிப்பிட்டபோது, “2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதற்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு பாடகர்களுடன் சின்மயியும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முதல் நாள், சின்மயி தான் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும், தனது அம்மா வேறு ஒரு இடத்தில் பாடுவதற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். அறிவிப்பு வெளியிட்ட பின், நாளை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் இன்று வந்து இப்படி கூறியது கவிஞர் வைரமுத்துவைக் கோபப்படுத்தியது. அவர் கோபத்தில் சின்மயியை திட்டினார். அதன்பின் வைரமுத்து அவர்களைப் பொருட்படுத்துவதில்லை” என்றார்

கருத்துகள் இல்லை: