tamil.indianexpress.com :இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொலை செய்ய சதி தீட்டியுள்ளதாக
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்
வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின, இந்த தகவலை தற்போது இலங்கை மறுத்துள்ளது.
இதுக் குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக வந்த தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இலங்கை அதிபரின் பரபரப்பு குற்றச்சாட்டால் இந்தியா, இலங்கை இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அதிபா் சிறிசேனாவின் பாதுகாப்பு அதிகாாிகள் இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து பின்னா் தொிவிக்கப்படும் என்று கூறியுயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின்
வாராந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இதில்
அந்நாட்டு அதிபா் மைத்ரிபாலபால சிறிசேனா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் அரசியல் காரணங்களுக்காக ‘ரா’ அமைப்பு என்னைக் கொல்ல
முயன்றது. ஆனால், அந்த விஷயம் பிரதமர் மோடிக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை” என்று பேசினாராம்.
அதே போல், ”இலங்கையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர் என்னைக்
கொல்ல முயன்றார். ‘ரா ‘ அமைப்பின் உளவாளி அவர். ‘ரா’ அமைப்பின்
செயல்பாடுகள் தன்னிச்சையானவை. அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வின் செயல்பாடுகள்
அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தெரியாது. அது போலவே இந்திய பிரதமருக்கும்
இந்தத் தகவல் தெரியாது” என்றும் பேசியதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று
செய்தி வெளியிட்டுள்ளது. சிறிசேனா பேசியதை உறுதிப்படுத்தி செய்தியும்
வெளியிட்டுள்ளது.இதுக் குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக வந்த தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இலங்கை அதிபரின் பரபரப்பு குற்றச்சாட்டால் இந்தியா, இலங்கை இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அதிபா் சிறிசேனாவின் பாதுகாப்பு அதிகாாிகள் இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து பின்னா் தொிவிக்கப்படும் என்று கூறியுயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக