செவ்வாய், 16 அக்டோபர், 2018

சபரிமலை நாளை பெண்களும் அனுமதி .. தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை .. முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

நாளை நடை திறப்பு அதிர வைத்த போராட்டம் பேச்சுவார்த்தை தோல்வி tamiloneinida -Veerakumar திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை தரிசனத்திற்காக முதல் முதலில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரேனும் சபரிமலைக்கு வருகிறார்களா என்பதை கேரளாவிலுள்ள பெண்களே கண்காணித்து வருகிறார்கள். பஸ்களில் பெண்களே அதிரடியாக சோதனையிட்டு, சபரிமலை நோக்கி வரும் பெண்களை ஆங்காங்கு இறக்கிவிட்டு, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.

கேரள கம்யூனிஸ்ட் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து, பாஜக சார்பில் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 90 கி.மீ. தொலைவுக்கு நேற்று பெண்கள் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணிக்கு பிரமாண்ட ஆதரவு கிடைத்தது. ஒரு லட்சத்திற்கும் அதிக ஆண், பெண்கள் இதில் பங்கேற்றனர்.

 இந்த பிரச்சினைக்கு சமரச தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜ குடும்பம், தந்தரிகள் சமாஜம், ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், யோக சேமசபா ஆகியோருக்கு தேவசம் போர்டு அழைப்பு விடுத்து இருந்தது. இதன் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்கள் எதிர்ப்பை கைவிடப்போவதில்லை என்று தேவசம் போர்டிடம் தெரிவித்துவிட்டனர். சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு செய்ய தேவசம் போர்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.

வரும் 19ம் தேதி நடக்கும் கூட்டத்தில்தான் மறுஆய்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று, பந்தள மன்னர் சசிகுமார் வர்மா பேட்டியளித்தார். பலமுனை எச்சரிக்கை பலமுனை எச்சரிக்கை சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை பம்பை, நிலக்கல், பந்தளம் பகுதிகளில் தடுத்து நிறுத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்து உள்ளன. மரபை மீறி சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டால் கூட்டாக தற்கொலை செய்வோம் என்று சிவசேனா பகிரங்கமாக அறிவித்துள்ளது.

நிலக்கல், பம்பை பகுதிகளில் ஆதிவாசி சங்கடன சமிதி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டம் நடத்தப்போவதாக, ஐயப்ப பக்தர்கள் அறிவித்து உள்ளதால், சபரிமலை பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கேரள பெண்களின் ஆதரவு, மரபு சார்ந்த வழிபாட்டுக்கு இருப்பதால், காவல்துறை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பலத்தை பிரயோகப்படுத்தாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி கட்டாயப்படுத்தி பிற பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தால், கேரள கம்யூனிஸ்ட் அரசு, அங்குள்ள பெண்கள் ஆதரவை இழந்துவிடும் என்ற அச்சம் அரசியல் ரீதியாக உள்ளதாம். கேரள அரசுக்கு தர்ம சங்கடம் கேரள அரசுக்கு தர்ம சங்கடம் இருப்பினும், கோயிலுக்கு வரும் பெண்கள் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் திரி சங்கு சொர்க்க நிலையில் சிக்கியுள்ளது கேரள அரசு.

எனவே, சபரிமலையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கமாண்டோ போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல சபரிமலை செல்லும் வழிகளான பந்தளம், நிலக்கல், பம்பை பகுதியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பெண் போலீசாரை அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்போவதில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரள அரசுக்கு தர்ம சங்கடம் நாளை நடை திறப்பு நாளை நடை திறப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு வரும் பெண்களை நாங்கள் தடுக்க மாட்டோம் ஆனால் மழை வெள்ள சேத பணிகள் நடந்து வருவதால் உடனடியாக பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க முடியாத சூழல் உள்ளது. எனவே இம்மாதம் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை என்று தேவசம் போர்டு ஏற்கனவே அறிவித்தது. ஆனால், நவம்பர் 17ம் தேதி முதல் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் முதல் பெண்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்திருந்தது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காரணமாக வைத்து, நாளையே பெண்கள் சபரிமலை வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, சபரிமலை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது 
பலமுனை எச்சரிக்கை திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை தரிசனத்திற்காக முதல் முதலில் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரேனும் சபரிமலைக்கு வருகிறார்களா என்பதை கேரளாவிலுள்ள பெண்களே கண்காணித்து வருகிறார்கள்.
பஸ்களில் பெண்களே அதிரடியாக சோதனையிட்டு, சபரிமலை நோக்கி வரும் பெண்களை ஆங்காங்கு இறக்கிவிட்டு, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
டிவு எடுக்கப்படும் என்று, பந்தள மன்னர் சசிகுமார் வர்மா பேட்டியளித்தார்.



கருத்துகள் இல்லை: