தினமலர் :சபரிமலை ; கேரள மாநிலம், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும்
அனுமதிப் பதை எதிர்த்து,நடந்த போராட்டத்தால், கோவிலுக்கு செல்லும் வழியில்
உள்ள நிலக்கல் என்ற பகுதி போர்க்களமானது. போராட்டக்காரர்கள், கல் வீசி
தாக்கியதால், போலீசார் தடியடி நடத்தினர். பம்பையில் போராட்டம் நடத்திய,
பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். இத்தனை பரபரப்புக்கு
இடையில், சன்னி தானத்தில் அமைதியாக நடை திறப்பு நடந்தது
கேரளாவில்
உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது
பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு
அளித்தது.இதற்கு எதிராக, கேரளா வில் பெரிய அளவில் போராட்டம் நடக்கிறது.
சபரிமலையின் அடிவாரமான, நிலக்கல்லில் சத்தியாகிரக பந்தல் அமைத்து, பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம், வேலை தொடர்பாக வந்த பெண்களைக் கூட தடுத்து, திருப்பி அனுப்பினர். போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.நேற்று காலை, 6:00 மணிக்கு, மீண்டும் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்ததோடு, சத்தியாகிரகபந்தலை பிரித்து எறிந்தனர். இதனால், காலை, 10:00 மணி வரை அமைதி நிலவியது.
அதன் பின், பல பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் திரண்டு வந்தனர். மதியம் கூட்டம் அதிகரித்தது. பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது; சில நிருபர்கள் மற்றும் மீடியா வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, மதியம், 2:15க்கு, மீண்டும் தடியடி நடத்தப்பட்டது. பம்பை கணபதி
நிலக்கல்லுக்கு, 400
கமாண்டோக்கள் அனுப்பப் படுவர். சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க
முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே,இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு, சபரிமலை பாதுகாப்பு கமிட்டி அழைப்பு
விடுத்துள்ளது. இதனால், நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில், 144 தடை
உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில்
தெரிவிக்கப் பட்டுள்ளது.
நிலக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும், பதற்றம் நிலவி வரும் நிலையில், சபரிமலை சன்னிதானம் அமைதியாக காணப்படுகிறது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து, தீபம் ஏற்றினார். தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரசாதம் வழங்கினார்.
இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகள் நடக்கும். காலை, 8:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், நேற்று, முதல் முறையாக சபரிமலை நடை திறக்கப்பட்டது. சன்னிதானத் தில், பெண் பக்தர்கள் எவரையும் காண முடியவில்லை.
'சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, இதுவரை, ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைத்து கேரள பிராமணர்கள் சங்கம் சார்பில், நேற்று, புதிய மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு கோவிலிலும், எந்தெந்த நேரத்தில் கோவில் திறப்பது, பூஜைகள் செய்வது, நன் கொடை பெறுவது, முடி காணிக்கை பெறுவது என, பல நடைமுறைகள் உள்ளன. இது பாரம் பரியமாக உள்ள நடைமுறை. இதில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது.பக்தர்களுக் கும், புனித யாத்திரை மேற்கொள்வோருக்கும் வித்தியாசம் உள்ளது.
சபரிமலைக்கு வரும் யாத்ரீகர்கள், பல்வேறு நியமங்களை கடைபிடித்து, விரதம் இருக்கின் றனர். சபரிமலை அய்யப்பன், பிரம்மச்சாரி என்பதால், கோவிலில் சில கட்டுப்பாடுகள் உள்ளன; இது, பெண்களுக்கு எதிரானதல்ல. பல இடங்களில், பெண்கள் மட்டுமே வழிபடும் கோவில்களும் உள்ளன. அது போலவே,
இந்தக் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்ப தில்லை. உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலின் பாரம்பரிய நடைமுறையில் தலையிடும் வகையிலான, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலையின் அடிவாரமான, நிலக்கல்லில் சத்தியாகிரக பந்தல் அமைத்து, பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம், வேலை தொடர்பாக வந்த பெண்களைக் கூட தடுத்து, திருப்பி அனுப்பினர். போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.நேற்று காலை, 6:00 மணிக்கு, மீண்டும் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்ததோடு, சத்தியாகிரகபந்தலை பிரித்து எறிந்தனர். இதனால், காலை, 10:00 மணி வரை அமைதி நிலவியது.
அதன் பின், பல பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் திரண்டு வந்தனர். மதியம் கூட்டம் அதிகரித்தது. பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது; சில நிருபர்கள் மற்றும் மீடியா வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, மதியம், 2:15க்கு, மீண்டும் தடியடி நடத்தப்பட்டது. பம்பை கணபதி
கோவில் அருகே , தேவசம்போர்டு முன்னாள் தலைவர், பிரயார் கோபால கிருஷ்ணன் தலைமையில், நாமஜெபம்
பாடும் போராட்டம் நடந்தது.இதில், பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரி
குடும்பத்தினர், அய்யப்பசேவா சங்க பிரமுகர்கள் பங்கேற்றனர்; அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, மாதவி, 40, தன் மகன் மற்றும் தந்தையுடன், நேற்று சபரிமலை தரிசனத்துக்கு வந்தார். அவரை போராட்டக்காரர்கள் தடுத்து, தகராறு செய்தனர்.அவரை, நீலிமலை பாதை வரை, போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டனர். அதன் பின், போலீசார் செல்லவில்லை. இதனால் மீண்டும், அவரை போராட்டக்காரர்கள் தடுத்தனர். அதனால் அவர், தரிசனத்துக்குசெல்லாமல் திரும்பினார்.
இவரை பாதுகாக்க போலீசார் முயற்சித்தபோது, போராட்டக்காரர்களுடன் லேசானமோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த, ராகுல் ஈஸ்வர் கைது செய்யப் பட்டார். அவர் உட்பட, 50 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.இதற்கிடையே, சபரிமலையில், மண்டல, மகர விளக்கு கால ஏற்பாடுகள் தொடர்பாக, அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று காலை நடந்தது.
கூட்டத்துக்கு பின், கேரள மாநில, தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: அரசியல் ரீதியாக நடக்கும் இந்த போராட்டத்தை, அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம். தந்திரி மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்துடன் பேச்சு நடத்த, அரசு தயாராக உள்ளது. மஹாராஷ்டிரா வில், சனி பகவான் கோவிலில் பெண்களை அனுமதித்த போது, ஆர்.எஸ்.எஸ்., எங்கே சென்றது?இவ்வாறு அவர் கூறினார்.
கேரள போலீஸ், டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ரா கூறியதாவது:போராட்டம் தீவிரம் அடைவதால், நிலக்கல் மற்றும் பம்பையில், கமாண்டோக்கள் பணி அமர்த்தப்படுவர். ஏற்கனவே, பெண் போலீசார் உட்பட, 1,000 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆந்திர பெண் வருகை

கமாண்டோ பாதுகாப்பு
கேரள போலீஸ், டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ரா கூறியதாவது:போராட்டம் தீவிரம் அடைவதால், நிலக்கல் மற்றும் பம்பையில், கமாண்டோக்கள் பணி அமர்த்தப்படுவர். ஏற்கனவே, பெண் போலீசார் உட்பட, 1,000 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Advertisement
அமைதி:
நிலக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும், பதற்றம் நிலவி வரும் நிலையில், சபரிமலை சன்னிதானம் அமைதியாக காணப்படுகிறது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து, தீபம் ஏற்றினார். தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரசாதம் வழங்கினார்.
இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகள் நடக்கும். காலை, 8:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், நேற்று, முதல் முறையாக சபரிமலை நடை திறக்கப்பட்டது. சன்னிதானத் தில், பெண் பக்தர்கள் எவரையும் காண முடியவில்லை.
மற்றொரு மனு தாக்கல்
'சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, இதுவரை, ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைத்து கேரள பிராமணர்கள் சங்கம் சார்பில், நேற்று, புதிய மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு கோவிலிலும், எந்தெந்த நேரத்தில் கோவில் திறப்பது, பூஜைகள் செய்வது, நன் கொடை பெறுவது, முடி காணிக்கை பெறுவது என, பல நடைமுறைகள் உள்ளன. இது பாரம் பரியமாக உள்ள நடைமுறை. இதில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது.பக்தர்களுக் கும், புனித யாத்திரை மேற்கொள்வோருக்கும் வித்தியாசம் உள்ளது.
சபரிமலைக்கு வரும் யாத்ரீகர்கள், பல்வேறு நியமங்களை கடைபிடித்து, விரதம் இருக்கின் றனர். சபரிமலை அய்யப்பன், பிரம்மச்சாரி என்பதால், கோவிலில் சில கட்டுப்பாடுகள் உள்ளன; இது, பெண்களுக்கு எதிரானதல்ல. பல இடங்களில், பெண்கள் மட்டுமே வழிபடும் கோவில்களும் உள்ளன. அது போலவே,
இந்தக் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்ப தில்லை. உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலின் பாரம்பரிய நடைமுறையில் தலையிடும் வகையிலான, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக