செவ்வாய், 16 அக்டோபர், 2018

அன்னா ஹசாரே கும்பலை ஆதரிக்காதவன் எல்லாம் எல்லாம் ஊழல் குற்றவாளி

Valan Antony :எல்லாவற்றுக்கு பின்னாலும் அரசியல். அன்னா ஹசாரே கும்பலை ஆதரிக்காதவன் எல்லாம் எல்லாம் ஊழல் குற்றவாளி ரேஞ்சுக்கு ஒரு பில்டப் இருந்த காலம். நான் ஒரு அன்னா ஹாசாரே எனபது போன்ற வாசகம் அடங்கிய குல்லாக்களை அணிந்த வெகுளிகளின் காலம் அது. ஐடி கம்பனிகளில் மாலை பணி முடிந்ததும் கூட்டம் கூட்டமாக அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக ஐடி பணியாளர்களின் பேரணிகள்.
நம்ம நாட்டுல உள்ள வேறெந்த முக்கிய பிரச்சினைகளுக்கும் இது போன்ற ஐடி ஊழியர் பேரணிகளை பெங்களுரில் நான் அதற்கு முன்னும் பின்னும் பார்த்ததில்லை.
பணத்தாள் நீக்கம் விலைவாசி உயர்வு பல ஐடி பெண்களின் தற்கொலை என நடப்பு பிரச்சினைகள் எதற்கும் எப்போதும் கூடாத மக்கள் அன்னா ஹசாரே என்ற மாங்கா மடையனை நம்பி கோசம் போட்டார்கள்.
ஊழலுக்கு எதிரான கோசமாகவே இருந்தாலும் அந்த மடையனுக்கு பின்னால் ஒரு முக்கிய அரசியல் அஜென்டா இருந்தது என்பதை எவனாவது அன்று உணர்ந்தானா.
சில இணைய பத்திரிக்கைகள் அன்னா ஹசாரேவை கிழித்து தொங்க விட்டன. அந்த கும்பலில் இருந்த கிரன்பேடியின் அயோக்கியத் தனங்களை எழுதின. அன்னாஹசாரேவின் சாதிய பாகுப்பாட்டு அரசியலை எழுதின. இதற்கு பின்னால் பிஜேபி இருந்தது என்பதை சிலர் சொன்னார்கள்.
பலர் காலம் கடந்து உணர்ந்தார்கள். விலையாக என்ன கொடுத்தோம். ஊழல் என்று முத்திரை குத்தி காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்க சிறு வழியை நாமே திறந்து விட்டோம். சரி..

இன்னைக்கு வியாபம் ஊழல் தொடங்கி ரஃபேல் ஊழல் வரை கொடி கட்டிப் பறக்கும் பிஜேபியின் ஊழலை பேச அன்னா ஹசாரே என்ற கிழட்டுப் பய எங்க போனான். அந்த கும்பலில் இருந்த கிரன் பேடி எங்கே போனாள். மோடிக்கு கால் கழுவி விட இந்த அயோக்கிய கும்பல் போனது தான் மிச்சம்.
இதுல கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் ஆகவில்லையா..அது நன்மை இல்லையா என்றால் ஊழலைத் தாண்டிய சமூகநீதி பார்வையில் கெஜ்ரிவால் அப்பட்டமான பார்ப்பன பிஜேபி அரசியலை செய்வதை புள்ளி விபரம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்வாதி படுகொலை சென்னையில் நடந்தது. ஸ்வாதி படுகொலை விவாதிக்கப் பட்ட அளவுக்கு அன்றாடம் மாநிலம் எங்கும் நடக்கும் படுகொலைகள் காதல் கொலைகள் இங்கே விவாதிக்கப் படுகிறதா என்றால் இல்லை.
அந்த வழக்கின் பரபரப்பு மற்றும் முழுமையான விசாரணை இன்றி ஓர் நாள் இரவில் ராம்குமாரை குற்றவாளியாக்கி விசாரணையே இன்றி சிறையிலேயே படுகொலை. அந்த கொலைக்கு பின்னால் இருந்த பார்ப்பன அரசியலும் பரபரப்புக்கான காரணங்களும் நாம் அறிந்ததே.
ஆக எந்த ஒரு விசயம் வந்தாலும் அதற்கு பின்னால் அரசியல் இருக்கிறதா இல்லையா என்பதை பகுத்தறிய முயல்வது நமது கடமை.
ஊழலுக்கு எதிராக போராடுவது தப்பா என்று அப்பாவியா கேட்காதீர்கள். அந்த போராட்டத்தை முன்னெடுத்த காலகட்டம் முன்னெடுத்த நபர்கள் யார் அவர்களின் பின்புலம் என்ன அரசியல் காரணம் எதுவும் இருக்கிறதா இல்லையா என்பதை எல்லாம் எப்போதும் கேள்வி கேளுங்கள்.
நந்தினி படுகொலைகளை பன்னிரெண்டு வயது புனிதாவின் பாலியல் வல்லுறவு படுகொலைகளை அனிதாக்களுக்கான நியாயங்களை தன்யா ராஜேந்திரன் மற்றும் சின்மயி கும்பல் என்றாவது வெளியே பேசுமா. நியாயம் கேட்குமா என்றால் நியாயம் கேட்காது என்பதை விட நமக்கு எதிராகவே பேசும்.
சில பரபரப்பான பாலியல் விசயங்களை குறிப்பிட்ட சில நபர்கள் குறிப்பிட்ட காலங்களில் பேசுவதற்கு பின்னால் மீடு என்ற சாக்கு தான் காரணமா அல்லது பார்ப்பன பிஜேபி அரசியலின் கேவலமான முகம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே எல்லாவற்றிலும் அரசியல் இருப்பது போலவே பாலியல் குற்றச்சாட்டு அஸ்திரங்களுக்கு பின்னாலும் அரசியல் கயமைத்தனங்கள் ஔிந்தே இருக்கின்றன.
தேர்தல் நெருங்கும் நேரங்களில் பிஜேபி திருடர்களின் வித விதமான அரசியல் அயோக்கியத்தனங்கள் எந்த வகையிலும் வேண்டுமானாலும் வரலாம்.
குறிப்பா அவாளோட குற்றச் சாட்டுகளின் மீது இருநூறு விழுக்காடு சந்தேகமும் கேள்விகளும் கேட்க வேண்டும்.
சும்மா எல்லாத்துக்கும் கோஷம் போடாதீர்கள்.
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை: