புதன், 17 அக்டோபர், 2018

ஆசீபா படு கொலைக்கு வாய் திறக்காத மேனகா காந்தி போன்றோர் இன்று போலிக்கண்ணீர்

J.P Josephine Baba : மீ டூ ...பாலியல் தேவை குற்றமல்ல, இயற்கை என பல கருத்துகக்ள் கொண்ட சமூகம் ஆகும் இந்தியா.  பெண்கள் துன்புறும் நாடுகளில் ’ஒன்றாவது’ இடத்தில் இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் தான் ஒருவன் பாலியல்தேவைக்கு அழைத்தான் என  பல வருடங்களுக்கு பின் குற்றம் சாருவதும் அதை ஆதரிப்பதும் அணிசேருவது விகடமாகத்தான் உள்ளது.
ஒருவனுக்கு பாலியல் தேவையின் பொருட்டு ஒருவளை அணுகினால் எனக்கு விருப்பமில்லை என்று விலகுவது/ஏற்பது அவர்கள் தனி நபர் விருப்பம்,  தேர்வை பொறுத்தது. ஆனால் ஒருவனின் சபலத்தை வைத்து விளையாடி விட்டு இவன் ஒருகாலத்தில் என்னை அழைத்தான் என கதை விடுவது பல உண்மையான பாலியல் சுரண்டல்கள் வெளிச்சத்திற்கு வராது செய்து விடும்.
அனுராதா ரமணனிடம் மத தலைவர் முதலில் வேண்டுதளாக, பின்பு அச்சுறுத்தலாக.... ஒரு கட்டத்தில் கட்டாயப்படுத்தபட்ட  பின்பும் ’என்னால் இயலாது’ என்று ஒதுங்கிய அவரின் தைரியத்தை பாராட்டியிருக்க வேண்டும். அவர் பிற்பாடு ஜெயேந்திரர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற போதும் இந்த சமூகம் அவருக்காக குரல் எழுப்பவில்லை.

ஜெயேந்திரன் ஆள் அனுப்பி வருவித்தது போல் இன்றைய சூழல் இல்லை. தொழில்நுட்ப வாளர்ச்சியால் பெரிதும் தகவல் தொடர்பு மாறி விட்டது. இன்று சமூகவலைத்தளங்கள் ஊடாக பாலியல் இச்சைகளை எளிதாக தெரிவிப்பதை காண்கின்றோம். இந்த இடங்களில் எல்லாம் பெண்கள் போராட்ட கொடியோடு கிளம்பியால் வாழ்க்கையே இதன் பின் போய் துலைக்க வேண்டி வரும். இது போன்ற அற்ப மனிதர்களை தங்கள் பக்கம் இருந்து விலக்குவதும் அதையும் மீறி வந்தால் சட்டத்தை அணுகுவதே  காலச்சிறந்தது.
இது ஒரு புறம் இருக்க பாலியல் இச்சையுடன் நடந்துகொள்வது கட்டாயப்படுத்துவது மட்டுமே பாலியல் சுரண்டலா? பல பெண்களை வேட்டையாட அல்லது சிறுமைப்படுத்த அவளுக்கு 100 பேரோடு பழக்கம். அவ திமிர் பிடிச்சவா? என அவதூறு பரப்பும் ஈனப்பிறவிகள் செய்வதும் பெண் பாலின வெறுப்புணர்ச்சியால் வரும் வன்புணர்வு தான். இவர்களுக்கு என்ன தண்டனை?
இன்று வேலை இடங்களில்; மேலதிகாரிகளின் நற்மதிப்பைப்பெற, உழக்காது ஊதியம் பெற, தகுதியற்ற அதிகாரம் பெற என பல பெண்கள் தங்கள் பாலியல் தகுதியை பயண்படுத்துகின்றனர். அந்த ஆண்கள் உதவியுடன் பலரை துன்புறுத்தி ஆட்சி செய்யவும் செய்கின்றனர்.
இன்றைய சமூக நிலையில் ஒரு சில  பெண்கள் தாங்கள் நினைத்ததை குறுக்கு வழியாக பெற பணம் அல்லது தன் உடலை தாரைவார்க்க தயங்குவது இல்லை என்பது நிர்மலா தேவி போன்ற நிகழ்வில் காண்கின்றோம். இப்போது மாட்டப்பட்டதால் சிறைச்சாலையில் உள்ளார். ஒரு வேளை அந்த பெண் நினைத்த பெரிய பதவியை அடைந்திருந்தால் இதுவெல்லாம் சகஜம் இதிலென்ன என்ற நினைப்புடன் பலர் அந்த பெண் முன் கைகட்டி சேவகம் செய்து கொண்டு இருந்திருப்பார்கள்.  இதற்கு எல்லாம் சரிப்பட்டு வராத பெண்கள் மாற்றலாக்கப்பட்டு, அதிக வேலைப்பழுவில் உட்படுத்தப்பட்டு கேவலப்படுத்தி பழியை தீர்த்து கொள்ளும் சமூகம் தான் இது. பல பெண்களுக்கு; நியாயமாக, எல்லா தகுதி இருந்தும் கிடைக்க வேண்டிய பல நன்மைகள் சில பெண்களின் குறுக்கு வழி செயலால் இழக்கும் பல உண்மைகள் உண்டு.
ஒருவன் நெருங்கினால் ’தனக்கு பிடிக்கவில்லை; வேண்டாம் எனில் நிலையாக நின்று எதிர்ப்பது ஆகும் பெண்களின் தைரியம், பெண்பலம். அல்லாது எல்லா நலன்களையும் பெற்று ஆட்சியையும் அதிகாரத்தை அனுபவித்து விட்டு பாலியலாக துன்புறுத்தினான் என குற்றம் சாட்டுவதில் என்ன  பெண் உரிமை உள்ளது. வீழ்ந்து எழுவதில் அல்ல விழாது செறுத்து நிற்பதும்  பெண்களின் பலம் தான். .
ஒரு பாடகி அல்லது ஒரு நடிகை எதிர்கொண்ட பாலியல் பிரச்சினைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இங்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏழை எளிய எதிற்க வலுவற்ற பெண்களுக்கு கொடுக்கின்றனரா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கான ஒரு அமைப்பு கூட நம் தேசத்தில் இல்லை. மகளிர் காவல் நிலையங்கள் நியாயமாக நடந்து கொள்ளகூடிய சட்ட அலுவலகமாக  எழ வேண்டியது காலத்தின் அவசியமாகும். வீட்டின் படி தாண்டியவளை கேவலமாக பார்க்கும் சூழலில் தான் வாழ்கின்றோம்.
மூர்க்கமாக தன்னை எதிர்க்கும், தனக்கு கெடுதலை மட்டும் விளைவிக்கும் பல ஆண்களை செறுக்க வழியே அற்று  இருக்கும் பெண்கள் என்னை பாலியலாக துன்புறுத்தினான் என்ற ஆயுதத்தை எடுக்கும் சூழல் மட்டுமே பல இடங்களில் உள்ளது.

வேலை இடங்களில் மதிக்கப்படும் இனமாக பெண்களை பார்ப்பதில்லை. தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை அவ…. பொம்பளைன்னு…. மிகவும் எளிதா கேவலப்படுத்தும் ஆண்களை கண்டுள்ளேன். பெண்களை நேரடியான பாலியல் தொல்லைக்கு உட்படுத்த இயலாத;  நாலு ஆம்பளை ஒன்று  சேர்ந்தா அவ…இருக்கால்லே ஹீ…ஹி ன்னு வார்த்தைகளால் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்குவதையும் கண்டுள்ளோம்
.
மீ….. டு….. போன்றவை அதன் நோக்கத்தில் இருந்து வழுகாது அதன் உண்மையான குறிக்கோளோடு நகரவேண்டும். ஒரு சாதாரண காய்கறி சந்தையில்; சாலையில், கட்டிட தொழிலாளியான பெண்ணும் தன் கருத்தை பதியும் காலம் வர வேண்டும். அல்லாது வியாபார விளம்பர மோகத்தில் உள்ளவர்களின் கைகளில் ஆயுதமாக மாறக்கூடாது மீ….. டூ…….
ஆசீபா படு கொலைக்கு வாய் திறக்காத மேனகா காந்தி கூட களத்தில் இறங்க துணிந்துள்ளார். பெண்கள் வேலையிடத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதை தெரிவிக்க ஒரு அமைப்பு மனித வளத்துறை மூலம் உருவாக்கலாம். கல்லூரியில் வேலை செய்யும் பெண்ணுக்கு கல்லூரி நிர்வாகியே பாலியல் தொல்லை கொடுக்கும் போது எதிர்க்க வழியற்று உழலும் பெண்களுக்கு அரசு என்ன அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியான திட்டங்களும் அமைப்பும் இல்லாது பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது கடினமே. இந்த எல்லா ஓட்டைகளையும் அப்படியே விடுத்து விட்டு மேல் வர்க்க பெண்கள் மீடியாவில் சொல்லும் புழுகு மூட்டை எல்லாம் பாலியல் தொல்லை என போராடினால் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான பாலியல் தொல்லைகளை கண்டு  தடுப்பது எப்போது? பெண் வீட்டில் வண்புணர்விற்கு உள்ளாகின்றார், காவல் நிலையத்தில், படிக்க செல்லும் கல்லூரியில், வேலைக்கு செல்லும் அலுவலகத்தில் என விமோச்சனமே இல்லாது பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எதிர்ப்பை தெரிவிக்க நிவர்த்தி செய்ய நல்ல அமைப்பு வேண்டும், அதைவிட உடனே எதிர்க்க பெண்களுக்குமன வலிமை வேண்டும்.

கருத்துகள் இல்லை: