புதன், 17 அக்டோபர், 2018

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி & விநியோகம் நிறுத்தம்

can water production stopped amidst water lorry strikeசமயம் : கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்< தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 3ம் தேதி, வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் எனவும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடை செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், தண்ணீர கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் , கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முரளி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: