செவ்வாய், 4 செப்டம்பர், 2018

ரவிக்குமாருக்குப் பாதுகாப்பு வழங்கிய புதுவை முதல்வர்!

 ரவிக்குமாருக்குப் பாதுகாப்பு வழங்கிய புதுவை முதல்வர்! மின்னம்பலம் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவின்பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத் துறை சில தினங்களுக்கு முன்னர் ரவிக்குமாரிடம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வந்தனர். ரவிக்குமாருக்கு புதுச்சேரி அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கக் கோரி ரவிக்குமார், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமியைக் கடந்த 29ஆம் தேதி இரவு சந்தித்து மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் நாராயணசாமி, ரவிக்குமாருக்குப் பாதுகாப்பு அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் இத்தகவலைத் தெரிவித்து ரவிக்குமாருக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 3) மாலை முதல் ரவிக்குமாருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். எட்டு மணி நேரம் வீதம் மூன்று காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று புதுவை காவல் துறை தெரிவித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ரவிக்குமாருக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கியுள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளா

கருத்துகள் இல்லை: