ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து விட்டு ஓடிய தாய்,,, ,,குன்றத்தூரில் ..

பாலில் விஷம் கலந்து குழந்தைகளைக் கொன்றுவிட்டு தப்பியோடிய தாய்!
குழந்தைகளை கொன்ற தாய்
tamil.news18.com: குன்றத்தூரில்  தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தாய் தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் விஜய் வசித்து வருகிறார். அவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவியும்  2 குழந்தைகளும் உள்ளனர். முதல் குழந்தை அஜய்-யும், 2-வது குழந்தை கார்னிகா-வும் பள்ளியில் படித்து வருகிறார்கள். இறந்த குழந்தைகளை ஆம்புலன்ஸில் ஏற்றும் போலீசார் நேற்று இரவு விஜய் வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்தனர்.
குழந்தைகள் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து விஜய் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்துவிட்டு குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரியவந்தது.  அதன் காரணமாகதான் நேற்று இரவு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தலைமறைவாகி உள்ளாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அபிராமியை கைது செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்று போலீசார் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: