திங்கள், 3 செப்டம்பர், 2018

கொல்கொத்தா 14 பிஞ்சுக் குழந்தைகளின் சடலங்கள் மீட்பு!

tamil.news18.com :கொல்கத்தாவில் 14 குழந்தைகளின் சடலங்களும், கருக்களும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தெற்கு கொல்கத்தாவின் ஹரிதெப்புர் பகுதியில், புதிதாக வாங்கப்பட்ட நிலத்தை சுத்தம் செய்தபோது அங்கு 14 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நீண்ட நாட்களாக காலியாக கிடந்த நிலம் ஒன்றை வாங்கி பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்தது.
அப்போது மண்ணுக்கடியில் சிதைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்கள் இருப்பதைப் பார்த்து பணியாளர்கள் அதிர்ந்துபோனார்கள். இந்த 14 குழந்தைகளின் சடலங்களும் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு, இரண்டு பைகளில் இருந்ததாக கொல்கத்தா போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சடலங்கள் ரசாயனத்தில் முக்கி எடுக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கருத்தடை செய்யும் நிறுவனங்களின் வேலையாக இது இருக்கலாம் என தெரிவித்த போலீசார், அருகில் உள்ள நீர் நிலைகளின் கரைகளில் ஏதேனும் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்துவருவதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: