Mahalaxmi :
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தலைமை செயலகம்
பற்றி என்ன தெரியும் ?
1. இந்தியாவிலேயே மிக பெரிய அரசு கட்டிடம் !!
2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்.
3. திராவிட தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடக்கிய கட்டிடம்.
4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்.
5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட கட்டிடம்.
6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்.
7. பூங்கா லைப்ரரி என உள்ளடக்கியது !!
8. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்.
9. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்.
10. ஆசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்த கட்டிடம் பற்றி வந்து பார்த்து கற்று படித்தது வரலாறு !
11. சட்டமன்றத்தில் பகல் நேரங்களில் இயற்க்கை சூரிய ஒளி விளக்காக இயங்கும் வண்ணம் அமைக்க பெற்றது.
12. அணைத்து மின் உபகாரணங்களும் தேவை கேற்ப தானாகவே ஆன் ஆப் ஆகும் திறன் கொண்டது.
13. அணைத்து கட்டிடமும் ஓர் இணைப்பில் இணைக்கபட்டே உள்ளது !
இக்கட்டிடம் நடைமுறையில் இருந்திருந்தால் இது தமிழகத்தின் அடையாளமாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் மூக்கின் மேல் விரலையும் வைக்க செய்திருக்கும்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி 18.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமந்தூரார் வளாகம்
ஓமந்தூரார்'' எனப்படும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் புதிய சட்டமன்ற மாளிகையும், அதையொட்டிய வளாகமும் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் "ஓமந்தூரார் வளாகம்'' எனப் பெயரிட்டு அழகுறக் கட்டிமுடிக்கப்பட்டது.
"பப்ளிக் ப்ளாசா''வில் நீண்டதொரு தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வண்ண மீன்கள் அந்தத் தொட்டியில் நீந்தி விளையாடுவதை அந்தப் பகுதிக்கு வரும் பள்ளிச் சிறார்களும், ஆண்களும், பெண்களும் கண்டுகளிக்கும் காட்சி அந்தக் கட்டிடத்திற்கே தனிப்பெரும் மாட்சியாக விளங்கியது. இந்தப் பெரிய கட்டிடத்தின் எல்லாப் பணிகளுமே ஜுன் 30ந்தேதிக்குள் முடிவடையும் என்பதையும் அரசின் சார்பிலேயே அறிவிக்கப்பட்டது.
ஓமாந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டிடம் என்னுடைய சொந்தப் பணத்திலே கட்டப்பட்டது அல்ல. அதைக்கூட சில பத்திரிகைகளில் ரூ.1200 கோடி செலவழித்துக் கட்டப்பட்ட கட்டிடம் என்று எழுதுகிறார்கள். தற்போது கட்டி முடிந்துள்ள கட்டிடத்திற்காக திட்டமிடப்பட்ட தொகை ரூ.623 கோடியே 99 லட்சம். அதிலே செலவு செய்யப்பட்டது ரூ.479 கோடியே 50 லட்சம். கட்டப்பட்டு வருகிற பிளாக் "பி'' கட்டிடத்திற்கான மதிப்பு ரூ.279 கோடியே 56 லட்சம். இதிலே செலவாகியுள்ள தொகை ரூ.72 கோடியே 30 லட்சம். எனவே ரூ.1200 கோடி செலவழிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு!
;ராணிமேரி கல்லூரியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய ராணுவமும் இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத ஒரு நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. மேலும், அங்கே உள்ள கட்டிடங்களில் ஏதாவது மாறுதல் செய்ய நேரிட்டால்கூட, ஏன், அங்கே இருக்கும் புல்லைச் செதுக்கி அகற்றுவதற்குக் கூட இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது.
வேறு சில அரசு அலுவலகங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருவதால் அதன் காரணமாக "வாடகை'' என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு தொடர்ந்து செலவு ஏற்படுகிறது என்பதாலும்; அனைத்து அலுவலகங்களும் அமையக்கூடிய விதத்தில் புதிய இடத்தை அ.தி.மு.க. அரசு முதலில் தேடி வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பூஜை புனஸ்காரங்களோடு நடைபெற்று, அன்றைய முதல் அமைச்சரான ஜெயலலிதாவே அதிலே கலந்து கொண்டார்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது முடிவெடுத்தார். நிதி நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு புதிய தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைப்போம் என அப்போது அ.தி.மு.க. அரசு தெரிவித்தது. சட்டப் பேரவையில் ஜெயலலிதாவால் அப்போது அறிவிக்கப்பட்டபோதே, "தற்போதைய தலைமைச் செயலகம் தகுதிவாய்ந்ததாக இல்லை. ராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் மோசமான நிலைமையில் உள்ளன. அதை இடிக்க வேண்டும். புதிய தலைமை செயலக வளாகம் அவசியம்.'' என்றெல்லாம் கூறப்பட்டது.
அந்தக்
கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தி.மு.க. ஆட்சியில் கட்டி 14 8
1975 அன்று திறந்து வைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல
இடங்களில் விரிசல் விழுந்துள்ளது என்றும், கசிவு ஏற்படுகிறது என்றும், எனவே
கோட்டையில் இருந்து உடனடியாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற
வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதா கூறினார்.
அதையெல்லாம் மனதிலே கொண்டு
தி.மு.க. ஆட்சியிலே புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது
ஜெயலலிதா அந்தப் புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து விட்டு, பழைய
தலைமைச் செயலகத்திலேயே தான் இருப்போம், நாமக்கல் கவிஞர் மாளிகையை
புனருத்தாரணம் செய்யப்போகிறோம் என்றெல்லாம் ஆரம்பித்திருப்பது
விதண்டாவாதம்; வெறுப்பினாலும், காழ்ப்புணர்ச்சியாலும் ஏற்பட்ட விளைவு;
என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்./>மேம்பாலம் வழியாகத்தானே
தற்போது
புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம்மாறிய பிறகு; தலைமைச் செயலகத்தை, பழைய
இடத்திலேயே தொடர்ந்து நடத்துவோம் என்றும்; புதிதாக கட்டப்பட்ட தலைமைச்
செயலகத்தைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் கூறி, அங்கே வைக்கப்பட்ட பெயர்ப்
பலகைகளை எல்லாம் பெயர்த்தெறிகின்ற பணியிலே அரசு ஈடுபட்டுள்ளது. ஓமந்தூரார்
வளாகத்திலே உள்ள கட்டிடம் தி.மு.க. ஆட்சியிலே கட்டப்பட்டது என்பதுதான்
அவரது வெறுப்புக்கு ஒரே காரணமாக இருக்க முடியுமென்றும், நிர்வாக வசதி இல்லை
என்றெல்லாம் கூறுவது அவரது உள்மனதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வை
மறைப்பதற்காகத்தான் என்பதும் நன்றாகப் புலனாகிறது.
தி.மு.க.
ஆட்சியிலே எழுப்பப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையை மட்டும் புனருத்தாரணம்
செய்து பயன்படுத்திக் கொள்ளலாமா? தி.மு.க. ஆட்சிக் காலத்தில்
உருவாக்கப்பட்ட மேம்பாலங்களின் வழியாகத்தானே ஜெயலலிதாவின் கார்
செல்லுகிறது! கருணாநிதி கட்டிய மேம்பாலம், அதிலே நான் பயணம் செய்யமாட்டேன்
என்று நிறுத்திவிட்டாரா என்ன?<>என்ன பாவம் செய்தது?
டெல்லி
சென்றபோது அவசரஅவசரமாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தை சீர்படுத்தி அங்கே
சென்று தங்கினாரே; நான் கட்டிய கட்டிடம் என்பதற்காக அங்கே போகாமலா
இருந்துவிட்டார். கோபம் என் மீதுதானே தவிர; நான் கட்டிய புதிய தலைமைச்
செயலகக் கட்டிடம் என்ன "பாவம்'' செய்தது?<//>எனவே
முதலமைச்சர் பொறுப்புக்கு மூன்றாவது முறையாக வந்துள்ள ஜெயலலிதா இனியாவது,
அரசியலில் பக்குவப்பட்ட ஒரு தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தி.மு.க. ஆட்சி செய்ததையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று
பிடிவாதம் பிடிப்பது என்பது அவர் இருக்கும் பதவிக்கு அழகல்ல.
எந்தவிதப்
பெருமையையும் சேர்க்காது. மக்களின் வரிப் பணத்தைச் செலவழித்து கட்டப்பட்ட
கட்டிடங்களை வேண்டாமென்று கூறுவது தன்னிச்சையான போக்கு மட்டுமல்ல; மக்களையே
அவமதிப்பதாகும். அவர்களே கூறிய கசிவு ஏற்பட்டுள்ள, விரிசல் உள்ள
கட்டிடத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்றி, அதன் பிறகு அங்கே ஏதாவது
அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு முழு பொறுப்பையும் புதிய
ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும். சட்டப்பேரவை மண்டபத்தை மீண்டும்
மாற்றுவதால் செம்மொழி ஆய்வு மையத்தின் நூலகத்தை தேவையில்லாமல்
மாற்றியிருக்கிறார்கள். இது தமிழுக்குச் செய்யப்பட்ட நன்மையல்ல. புதிய அரசு
நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள், மக்களுக்கு ஆற்றிட வேண்டிய
முக்கிய பணிகள் ஏராளமாக இருக்கும்போது தலைமைச் செயலகத்தை மாற்றுவதில் அரசு
இயந்திரத்தின் முழுக் கவனத்தையும் செலவழிப்பது வீண் வேலை, தனி மனிதர்
ஒருவரின் பிடிவாதத்திற்காக அரசு நிர்வாகத்தைத் திசைதிருப்பும் செயலாகும்.
நம்பிக்கையின் ஒரு துளிபுதிய தலைமைச் செயலகம் தமிழக அரசுக்குச் சொந்தமான இடம். அனைத்து அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைத்திட முடியும். ஆனால் பழைய தலைமைச் செயலகம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. காலத்தின் மாற்றத்திற்கேற்ற நிர்வாகத் தேவைகளை அங்கே நிறைவு செய்திட முடியாது. தமிழக அரசுக்குச் சொந்தமான புதிய இடத்தை விட்டுவிட்டு, வேண்டுமென்றே பழைய இடத்திற்கு போவது என்பது முறையான நிர்வாகச் செயல்பாடு அல்ல. ஆட்சிகள் மாறும்போது சில திட்டங்கள், சட்டங்கள் மாறலாமே தவிர; அடிப்படையில் முந்தைய ஆட்சி செய்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது ஓர் ஆட்சி மாற்றத்தின் நெறிமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்துடன் நிறுத்துகிறேன்.
இதற்கு மேல் நான் எதுவும் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். பகுத்தறிந்து பார்க்கும் பழக்கமும் தெளிவும் தமிழ் மக்களுக்கு அறவே அற்றுப்போய்விட்டதாக நான் கருதவில்லை. அந்த நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்த அறிக்கை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.<//dmkthondan.blogspot.com/2
பற்றி என்ன தெரியும் ?
1. இந்தியாவிலேயே மிக பெரிய அரசு கட்டிடம் !!
2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்.
3. திராவிட தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடக்கிய கட்டிடம்.
4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்.
5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட கட்டிடம்.
6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்.
7. பூங்கா லைப்ரரி என உள்ளடக்கியது !!
8. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்.
9. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்.
10. ஆசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்த கட்டிடம் பற்றி வந்து பார்த்து கற்று படித்தது வரலாறு !
11. சட்டமன்றத்தில் பகல் நேரங்களில் இயற்க்கை சூரிய ஒளி விளக்காக இயங்கும் வண்ணம் அமைக்க பெற்றது.
12. அணைத்து மின் உபகாரணங்களும் தேவை கேற்ப தானாகவே ஆன் ஆப் ஆகும் திறன் கொண்டது.
13. அணைத்து கட்டிடமும் ஓர் இணைப்பில் இணைக்கபட்டே உள்ளது !
இக்கட்டிடம் நடைமுறையில் இருந்திருந்தால் இது தமிழகத்தின் அடையாளமாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் மூக்கின் மேல் விரலையும் வைக்க செய்திருக்கும்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி 18.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமந்தூரார் வளாகம்
ஓமந்தூரார்'' எனப்படும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் புதிய சட்டமன்ற மாளிகையும், அதையொட்டிய வளாகமும் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் "ஓமந்தூரார் வளாகம்'' எனப் பெயரிட்டு அழகுறக் கட்டிமுடிக்கப்பட்டது.
"பப்ளிக் ப்ளாசா''வில் நீண்டதொரு தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வண்ண மீன்கள் அந்தத் தொட்டியில் நீந்தி விளையாடுவதை அந்தப் பகுதிக்கு வரும் பள்ளிச் சிறார்களும், ஆண்களும், பெண்களும் கண்டுகளிக்கும் காட்சி அந்தக் கட்டிடத்திற்கே தனிப்பெரும் மாட்சியாக விளங்கியது. இந்தப் பெரிய கட்டிடத்தின் எல்லாப் பணிகளுமே ஜுன் 30ந்தேதிக்குள் முடிவடையும் என்பதையும் அரசின் சார்பிலேயே அறிவிக்கப்பட்டது.
ஓமாந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டிடம் என்னுடைய சொந்தப் பணத்திலே கட்டப்பட்டது அல்ல. அதைக்கூட சில பத்திரிகைகளில் ரூ.1200 கோடி செலவழித்துக் கட்டப்பட்ட கட்டிடம் என்று எழுதுகிறார்கள். தற்போது கட்டி முடிந்துள்ள கட்டிடத்திற்காக திட்டமிடப்பட்ட தொகை ரூ.623 கோடியே 99 லட்சம். அதிலே செலவு செய்யப்பட்டது ரூ.479 கோடியே 50 லட்சம். கட்டப்பட்டு வருகிற பிளாக் "பி'' கட்டிடத்திற்கான மதிப்பு ரூ.279 கோடியே 56 லட்சம். இதிலே செலவாகியுள்ள தொகை ரூ.72 கோடியே 30 லட்சம். எனவே ரூ.1200 கோடி செலவழிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு!
;ராணிமேரி கல்லூரியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய ராணுவமும் இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத ஒரு நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. மேலும், அங்கே உள்ள கட்டிடங்களில் ஏதாவது மாறுதல் செய்ய நேரிட்டால்கூட, ஏன், அங்கே இருக்கும் புல்லைச் செதுக்கி அகற்றுவதற்குக் கூட இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது.
வேறு சில அரசு அலுவலகங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருவதால் அதன் காரணமாக "வாடகை'' என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு தொடர்ந்து செலவு ஏற்படுகிறது என்பதாலும்; அனைத்து அலுவலகங்களும் அமையக்கூடிய விதத்தில் புதிய இடத்தை அ.தி.மு.க. அரசு முதலில் தேடி வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பூஜை புனஸ்காரங்களோடு நடைபெற்று, அன்றைய முதல் அமைச்சரான ஜெயலலிதாவே அதிலே கலந்து கொண்டார்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது முடிவெடுத்தார். நிதி நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு புதிய தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைப்போம் என அப்போது அ.தி.மு.க. அரசு தெரிவித்தது. சட்டப் பேரவையில் ஜெயலலிதாவால் அப்போது அறிவிக்கப்பட்டபோதே, "தற்போதைய தலைமைச் செயலகம் தகுதிவாய்ந்ததாக இல்லை. ராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் மோசமான நிலைமையில் உள்ளன. அதை இடிக்க வேண்டும். புதிய தலைமை செயலக வளாகம் அவசியம்.'' என்றெல்லாம் கூறப்பட்டது.
நம்பிக்கையின் ஒரு துளிபுதிய தலைமைச் செயலகம் தமிழக அரசுக்குச் சொந்தமான இடம். அனைத்து அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைத்திட முடியும். ஆனால் பழைய தலைமைச் செயலகம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. காலத்தின் மாற்றத்திற்கேற்ற நிர்வாகத் தேவைகளை அங்கே நிறைவு செய்திட முடியாது. தமிழக அரசுக்குச் சொந்தமான புதிய இடத்தை விட்டுவிட்டு, வேண்டுமென்றே பழைய இடத்திற்கு போவது என்பது முறையான நிர்வாகச் செயல்பாடு அல்ல. ஆட்சிகள் மாறும்போது சில திட்டங்கள், சட்டங்கள் மாறலாமே தவிர; அடிப்படையில் முந்தைய ஆட்சி செய்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது ஓர் ஆட்சி மாற்றத்தின் நெறிமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்துடன் நிறுத்துகிறேன்.
இதற்கு மேல் நான் எதுவும் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். பகுத்தறிந்து பார்க்கும் பழக்கமும் தெளிவும் தமிழ் மக்களுக்கு அறவே அற்றுப்போய்விட்டதாக நான் கருதவில்லை. அந்த நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்த அறிக்கை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.<//dmkthondan.blogspot.com/2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக