Savukku · : குடியரசு தினத்தன்று அப்போதைய, பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலெண்டே
சிறப்பு விருந்தினராக புதுதில்லி வருகை தந்து 36 ரஃபேல் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கையெழுத்திடுவதற்கு இரண்டு நாட்கள் முன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட், ஹாலண்டேவின் துணை மற்றும் நடிகையான ஜூலி கெயட்டுடன் திரைப்படம் தயாரிப்பதற்கான உடன்பாடு செய்துகொண்டது.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ், டசலாட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிட் (டி.ஆர்.ஏ.எல்) மூலமான ரூ.59,000 கோடி திட்டத்தில் அங்கமானது. இதில் ரிலையன்ஸ் டிபென்சிற்கு 51 சதவீதப் பங்கு இருந்தது. ரஃபேல் விமானத்தின் பிரெஞ்சு உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேஷன், டி.ஆர்.ஏ.எல் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகள் கொண்டுள்ளது.
2016 ஜனவரி, 24இல் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட், பிரெஞ்சு படம் ஒன்றை இணைந்து தயாரிக்க கெயத்தின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக அறிவித்தது.
2016, ஜனவரி 26இல் இரு நாடுகளும் 36 விமானங்கள் விற்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. ஹாலண்டேவின் இந்தியப் பயணத்தின்போது கையெழுத்தாக இருந்த இந்த ஒப்பந்தம் ஒரு சில நிதி காரணங்களால் தாமதமானதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
ரிலையன்ஸ் தயாரிப்பில் உதவிய திரைப்படம் பிரெஞ்சு நடிகர் மற்றும் இயக்குனர் செர்ஜி ஹசவாசியசால் இயக்கப்பட்டும், 2017 டிசபர் 20இல் டவுட் லா ஹவுட் எனும் பெயரில் வெளியானது.
நாகபுரியில் டி.ஆர்.ஏ.எல் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில், அப்போதைய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பிளாரப்ஸ் பார்லி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் டசால்ட் ஆவியேஷன் தலைவர் எரிக் தாப்பம் மற்றும் அனில் அம்பானி அடிக்கல் நாட்டினர்.
இந்த 98 நிமிட பிரெஞ்சு திரைப்படம் முதலில் 2017இல் ஸ்பெயினில் சான் சப்ஸ்டின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எட்டு நாடுகளில் விநியோகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இன்னமும் வெளியாகவில்லை.
டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் இந்தியாவில் கூட்டு நிறுவனம் உருவாக்குவது தொடர்பான முதல் அறிவிப்பு 2016 அக்டோபரில் ஹாலனெடே அதிபராக இருந்தபோது செய்யபப்ட்டது.
2016 செப்டம்பர் 23 ல், புதுதில்லியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்கள் ரூ.59,000 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 10 நாட்களுக்குப்பிறகு இது நிகழ்ந்தது. இதில் 50 சதவீத ஆப்செட் பிரிவும் இடம்பெற்றிருந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொலைபேசி மூலம் ரோக் இண்டர்நேஷனல் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, இமெயில் வாயிலாக கேள்விகள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இமெயில்களுக்கு பதில் வரவில்லை. மேற்கொண்டு விசாரித்தபோது, கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்க்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனத்தைக் குறுஞ்செய்தி, போன் மற்றும் இமெயில் மூலம் தொடர்புகொண்டோம். இருப்பினும், டவுட் லா ஹவுட் தயாரிப்பில் நிறுவன பங்கு தொடர்பான இந்தியன் எக்ஸ்பிரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
ஆப்செட் ஷரத்தின் கீழ், மொத்த கொள்முதல் தொகையில் 50 சதவீதத்தை பிரான்ஸ் இந்தியாவில் உள்ளூர் ஒப்பந்தங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மதிப்பு ரூ.30,000 கோடி. ஒப்பந்தப்படி இந்த ஷரத்தை 2019 செப்டம்பர் முதல் 2023 செப்டம்பர் வரை நிறைவேற்ற வேண்டும்.
ரஃபேல் ஆப்செட்தான் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் பெற்ற இந்த அளவிலான பெரிய ஒப்பந்தமாகும். இது நிறுவனத்தை அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பாதுகாப்பு உற்பத்தியில் எந்த அனுபவமும் இல்லாத அனில் அம்பானி நிறுவனத்திற்கு தேவையில்லாத சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளன.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிட் (எ.ச்யு.எல்) நிறுவனத்தைப் புறக்கணித்துவிட்டு இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் கூறப்படுகிறது. இந்நிறுவனம்தான் பாஜக அரசு ரத்து செய்த 126 விமான ஒப்பந்ததின்படி தயாரிப்பில் ஈடுபட இருந்தது.
“36 ரஃபேல் விமானங்களுக்கான 2016 ஒப்பந்தத்தின் இந்திய ஆப்செட் பங்குதாரராக எந்த நிறுவனத்தையும், வெண்டர் நிறுவனம் ( டசால்ட் ஏவியேஷன்) இன்னும் தேர்வு செய்யவில்லை. ஏனெனில் பொருந்தக்கூடிய நெறிமுறைகளின் படி, டசால்ட் நிறுவனம் தனக்கான இந்திய பங்குதாரரை சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளலாம் மற்றும் ஆப்செட் கிரெடிட் கோரும்போது அல்லது ஆப்செட் நிபந்தனைகளை நிறைவேற்றிய ஓராண்டில் இந்தத் தகவலை தெரிவித்தால் போதுமானது” என பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரு.30,000 கோடி ஆப்செட் ஒப்பந்தம் கிடைத்துள்ளது எனும் தகவல் ஆதரமாற்றது என ரிலையன்ஸ் டிபன்ஸ் மறுத்துள்ளது. டசால்ட் மற்றும் அதன் பிரதான சப்ளையர்கள், ஆப்செட் ஒப்பந்தங்களில் 100 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்குபெறும் என ஏற்கனவே தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இம்மாதம் வெளியான அறிக்கையில் நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்களான எச்.ஏ.எல் மற்றும் பாரத் எலக்டிரிகல்ஸ் உடனான கூட்டும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத் துவக்கத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், 36 விமானங்களில் ஒரு ரூபாய் மதிப்பிலான ஒரு பாகம்கூட ரிலையன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட இல்லை என அனில் அம்பானி கூறியிருந்தார். எனவே அனுபவமின்மை குற்றச்சாட்டு எழவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் ,2015 ல், மோடி பிரான்ஸ் சென்றிருந்தபோது, ஏபரல் 10, ஹாலண்டே முன்னிலையில், அரசு முறை ஒப்பந்தத்தில் இந்தியா 36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்யும் என அறிவித்தபோது, அனில் அம்பானி பாரிசில் இருந்தார்.
ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம், கம்பெனிகள் பதிவாளரிடம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2014ஆம் நிதியாண்டில் ரூ. 1,75,501 நஷ்டம். அடுத்த ஆண்டில் இது ரூ.22,694 ஆக இருந்தது. பின்னர் 2017ஆம் நிதியாண்டில் ரூ. 5,75,439 ஆக உயர்ந்து 2017ஆம் நிதியாண்டில் ரூ. 24,79 ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“36 ரஃபேல் விமானங்கள் தொடர்பான 2016 ஒப்பந்தம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுவதால், திறன், எந்திரம், டெலிவரி, விலை, பராமரிப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட அம்சங்களில் சிறந்த ஷரத்துக்களுடன் அரசு இந்த ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது மற்றும், பத்தாண்டுகளில் அப்போதைய அரசு முடிக்க முடியாத ஒப்பந்தத்தில் உத்தேசமாகக் குறிப்பிடப்பட்டதைவிடச் சிறந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மேலும் தற்போதைய அரசு ஓராண்டில் ஒப்பந்ததை பேசி முடித்துள்ளது” என்றும் பாதுகாப்பு அமைச்சகம் பிப்ரவரி அறிக்கையில் கூறியிருந்தது.
நன்றி; இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/india/rafale-talks-were-on-when-reliance-entertainment-helped-produce-film-for-francois-hollandes-partner-5333492/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக