மின்னம்பலம் :
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடுகளில் 2017-18ஆம் ஆண்டிலும் மொரீஷியஸ் முதலிடம் பிடித்துள்ளது.
2017-18 நிதியாண்டில் இந்தியா ஈர்த்த அந்நிய நேரடி முதலீடுகளின் மொத்த மதிப்பு 37.36 பில்லியன் டாலராகும். 2016-17 நிதியாண்டில் இந்த மதிப்பு 36.31 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. அதிகபட்சமாக மொரீஷியஸ் நாட்டிலிருந்து 13.41 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. 2016-17 நிதியாண்டில் மொரீஷியஸ் மேற்கொண்ட முதலீடுகள் 12.38 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. மொரீஷியஸ் நாட்டைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து 9.27 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் சிங்கப்பூரின் முதலீடு 6.52 பில்லியன் டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துறை வாரியாகப் பார்த்தோமேயானால், தகவல் தொடர்பு சேவைகள் துறையில் 5.8 பில்லியன் டாலரிலிருந்து 8.8 பில்லியன் டாலராக முதலீடுகள் அதிகரித்துள்ளன. சில்லறை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகத் துறையில் 2.27 பில்லியன் டாலரிலிருந்து 4.47 பில்லியன் டாலராகவும், நிதிச் சேவைகள் துறையில் 3.73 பில்லியன் டாலரிருந்து 4.07 பில்லியன் டாலராகவும் முதலீடுகள் உயர்ந்துள்ளன. எனினும் உற்பத்தித் துறையில் முதலீடுகள் 7.06 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கட்டுமானம், சுரங்கம் ஆகிய துறைகளிலும் 2017-18 நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

1 கருத்து:
For investment related information in Tamil please visit https://valaithamil.com/finance.html
கருத்துரையிடுக