tamil.oneindia.com -shyamsundar: சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி தலைமையில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது.
இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்த இருக்கிறார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி அவர்கள் செல்ல இருக்கிறார்கள்.
இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. இதற்காக சில மதுரை நிர்வாகிகள் நேற்றே, சென்னைக்கு சென்று ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
நேற்று சென்னை வந்தார் இதற்காக நேற்று அதிகாலை அழகிரி சென்னை விமான நிலையம் வந்தார். பின் தனியார் ஹோட்டலில் சென்று தாங்கினார். இந்த நிலையில் இன்று காலை இந்த பேரணி நடக்க உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடுகள் இதற்காக சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பேரணி நடக்க உள்ள இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் இடம்பெற்று உள்ளது. அதேபோல் வித்தியாசமான வசனங்களுடன் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதி பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்படும். அங்கிருந்து அமைதி பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைகிறது. பாதுகாப்பு கருதி இவர்கள் அமைதி பேரணிக்கு திட்டமிட்டு இருந்த தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு இந்த நிலையில் இங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மூன்று 3 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளது.
எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்? இதில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வளவு பேர் வருவார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், குறைந்தது 50 ஆயிர பேராவது கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக