செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அபிராமி பற்றிய குடும்ப விபரங்கள். தான் பெற்ற குழந்தைகளை பாலில் விஷம் வைத்து ..

காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி- பரபரப்பான தகவல்கள்மாலைமலர் : தன் குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற அபிராமி உண்மையில் மிகவும் கடவுள் பக்தி உள்ளவராம் .. உதாரணமாக தனது முகநூலில் ஏராளமான சாமி படங்களை பதிவிட்டு உள்ளார். இந்த படமும் அவரது முகநூல் படம்தான்
கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி, சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.
அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக அவர் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அபிராமி, பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் அளவுக்கு கொடூர கொலையாளியாக மாறுவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல் கள் கிடைத்துள்ளன.
சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய போது தான் அபிராமி, விஜயை சந்தித்துள்ளார். முதல் பார்வையிலேயே காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண் டனர். இவர்களின் இல்லற வாழ்க்கையில் அஜய், கார்னிகா என 2 குழந்தைகள் பிறந்தன.

திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல் வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படை யில் வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது.
இதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்து டன் அபிராமி பழக தொடங் கினார். கணவர், வேலை வி‌ஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால் 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிக மானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.
இதன்பிறகு இந்த சுந்தரத் துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது.
இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபி ராமி, நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.
அபிராமி, சுந்தரம் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.
இந்த வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர போலீசார் முடிவு செய்துள் ளனர்.
இந்த நிலையில் குழந்தை கள் கொலை செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சுதா கூறும்போது, சிறுவன் அஜய் 3 மாத குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே எங்களுக்கு தெரியும். 2-வது பெண் குழந்தையும் இங்கேதான் பிறந்தது. குழந்தைகளை கொல்லாமல் விட்டிருந்தால் நாங்களே பாசத்தோடு வளர்த்திருப்போம் என்றார். * * * அபிராமி

கருத்துகள் இல்லை: