ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், ரபேல் போர் விமானம் தற்போது படுவேகம் எடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
இந்த விமானம் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசப்போவது நிச்சயம் என்றும், இது இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பிரான்சில் இதுதொடர்பாக பெரும் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது என அனில்ஜியிடம் சொல்லுங்கள் மோடிஜி என்று தமது டுவிட்டர் பக்கத்தில், ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
dailythanthi.com புதுடெல்லி,- பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 ரபேல் ரக போர்விமானங்களை வாங்குவதற்கு 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பேசப்பட்ட விலையை விட தற்போது கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நீக்கம், ரிலையன்ஸ் சேர்க்கப்பட்டது எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.

போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில்
எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்
தரப்பட்டுள்ளது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ்
அரசுடன் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த
ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்”
நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை
முன்வைக்கிறது. இப்போது பிரச்சனைக்கு மேலும் தீனி போடும் வகையில் செய்தி
ஒன்று வெளியாகியுள்ளது.
ரபேல் போர் விமான
ஒப்பந்தம் நடைபெற்ற போது பிரான்ஸ் அதிபர் ஹெலாண்டேவின் காதலியை வைத்து
ரிலையன்ஸ் படம் தயாரித்தது என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை
பகிர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள
செய்தியில்,
ரபேல் போர் விமான ஊழல் உலக அளவிலான ஒன்றாகும். இந்த போர் விமானம் தற்போது படுவேகம் எடுத்திருக்கிறது. இந்த விமானம் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசப்போவது நிச்சயம். இது இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும். பிரான்சில் இது தொடர்பாக பெரும் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது என அனில் ஜியிடம் சொல்லுங்கள் மோடிஜி என குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக