குட்கா விஜெயபாச்க்கர் -குட்கா ஜோர்ஜ் -குட்கா ராஜேந்திரன் |
சமாதனம் செய்ய முற்பட்ட
இதனால விஜயபாஸ்கர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனும் சூழலும் தற்போது நிலவுகிறது.
இந்த வழக்கை இவ்வளவு தூரம் கொண்டு சென்று சிபிஐ வசம் ஒப்படைக்க முயற்சி எடுத்தது திமுக தான்.
தற்போது இந்த வழக்கு விசாரணையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதும் திமுக தான்.
2013ல் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், சிபிஐ இடம் மாட்டி அப்ரூவலாக மாறி இருக்கிறார் மாதவராவ்.
இவரிடம் இருந்து ஏற்கனவே கைபற்ற பட்ட டைரியில் அவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சென்னை காவல்துறையில் ஆணையர்களாக இருந்த ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்த விவரம் வெளியாகி இருந்தது.
திமுக இந்த விஷயத்தில் தீவிர முனைப்பு காட்டிய போதே, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் தெரிவித்திருக்கிறார் விஜய்பாஸ்கர். ஆனால் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கவனக்குறைவாக இருந்துவிட்டனர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ். இதனால் தான் இன்று தான் கைதாகு நிலை ஏற்பட்டிருக்கிறது என கடும் கோபத்தில் இருக்கிறார் விஜய் பாஸ்கர்.
அதிமுகவில் இக்கட்டான சூழ்நிலை நிலவிய போதெல்லாம் கை கொடுத்தவர் விஜய பாஸ்கர். அதிமுக கட்சி பிளவு ஏற்பட்டு பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்த தருணங்களில் எல்லாம் விஜயபாஸ்கர் கட்சிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார். இதை சுட்டி காட்டி தற்போது தனக்கு வந்திருக்கும் இக்கட்டில் இருந்து தன்னை காப்பாற்றிட, இபிஎஸ் ஆவன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் நானோ என் குடும்பத்தினரோ சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் , அதன் பிறகு ஒட்டு மொத்த அதிமுக அமைச்சர்களுமே கைதாக வேண்டி வரும். அதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவரும் என்ன என்ன ஊழல்களில் ஈடுபட்டிருந்தனர் எனும் புள்ளி விவரம் என்னிடம் இருக்கிறது, இபிஎஸ் ஓபிஎஸ் உட்பட அனைவர் ஜாதகமும் என் கையில். என நேரடியாகவே மிரட்டி இருக்கிறார் விஜயபாஸ்கர்.
ஓபிஎஸ் அவரை சமாதனம் செய்ய முற்பட்ட போது, அம்மா இருக்கும் போதே நடந்த 5000 கோடி ஊழல் விஷயம் எனக்கு நியாபகம் இருக்கிறது. என கிடுக்குப்பிடி போட்டிருக்கிறார் விஜயபாஸ்கர். ஸ்டாலின் குட்கா விவகாரத்தை மட்டும் கையில் எடுக்கவில்லை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வழக்குகளையும் தான் கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அந்த வழக்குகளை எல்லாம் தாமதப்படுத்திய இபிஎஸ்,ஓபிஎஸ் தன் விஷயத்தில் அலட்சியமாக இருந்தது காரணத்தோடுதான் எனும் கோபத்தில் இருக்கும் விஜயபாஸ்கர் , தினகரனிடம் இது குறித்து எம்.எல்.ஏ ஒருவர் மூலம் பேசி இருக்கிறார்.
எனக்கு எதிரி அவங்க தான். நீங்க இல்லை அதனால எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கலாம். பயப்படாதீங்க. இது எல்லாம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக மத்திய அரசு செய்யற வேலை தான் . நாம பாத்துக்கலாம் என ஆறுதல் கூறி இருக்கிறார் தினகரன். ஏற்கனவே 18 எம்.எல்.ஏ வழக்கில் வரப்போகும் தீர்ப்பு குறித்து பயத்தில் இருக்கும் இபிஎஸ் ஓபிஎஸ்க்கு , இந்த குட்கா விவகாரம் மேலும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக