வியாழன், 1 மார்ச், 2018

மதுரை இரு ரவுடிகள் சுட்டு கொலை ...

மாலைமலர் :மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை மதுரை: மதுரையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க மாநர போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இன்று சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள ரவுடிகளை பிடிக்க மாநகர போலீசார் சென்றனர். அப்போது போலீசார் - ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் என்கவுண்டர் நடத்தினர். இதில், மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்கவுண்டரில் பலியானவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் என்கவுண்டர் நடவடிக்கை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: