திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஸ்ரீதேவிக்கு உண்மையிலேயே ஹார்ட் அட்டாக் தானா?... கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

Gajalakshmi  Oneindia Tamil  ஸ்ரீதேவிக்கு இதற்க்கு முன்பு மாரடைப்பு வந்துள்ளதா? துபாய் : இந்தியாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மரணம் திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும்ம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவி மாரடைப்பில் தான் உயிரிழந்தாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை என்று துபாயில் இருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கந்தக பூமியாம் சிவகாசியில் பிறந்து தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலமாந்து, பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது 54 வயதில் மாராடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 
 
ஆனால், அவர் தங்கியிருந்த எமிரட்ஸ் டவர்ஸ் ஹோட்டல் அறையின் குளியல் அறையில் மயக்கம் போட்டு விழுந்ததாக சொல்கிறது கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை. திருமண நிகழ்ச்சி முடிந்து ஓட்டல் அறைக்கு சென்ற பின்னர் கணவர் போனி கபூருடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் குளியல் அறைக்கு சென்றவர் 15 நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் உடைத்து பார்த்த போது தான் ஸ்ரீதேவி பாத் டப்பில் மயங்கி கிடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
மரணம் பற்றி அறிவிக்காத மருத்துவமனை மரணம் பற்றி அறிவிக்காத மருத்துவமனை இதனையடுத்து ஸ்ரீதேவியை உடனடியாக ரஷித் மருத்துவமனையில் அனுமதிகத்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். 
உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று மருத்துவர்கள் கூறாத நிலையில் மாரடைப்பில் உயிரிழந்ததாக போனி கபூரின் சகோதரர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கருத்து கூற மறுத்த ஓட்டல் நிர்வாகம் கருத்து கூற மறுத்த ஓட்டல் நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஹோட்டல் நிர்வாகம் எந்த கருத்தையும் இதுவரை பகிர்ந்துகொள்ளவில்லை. வெளிப்படையாக பேச தொடர்ந்து மறுத்தும் வருகிறது. முதல்கட்ட தகவல்படி, மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என சொல்லப்பட்டாலும், ஆனால், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறது அந்த பத்திரிகை. 
 
உடற்கூறு ஆய்வில் தெரியும் உடற்கூறு ஆய்வில் தெரியும் முறையாக உடல்கூறாய்வு செய்யப்பட்டு, அதன் பிறகுதான் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பமுடியும் என்று துபாய் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், ஸ்ரீதேவியின் மரணத்தில் நிலவும் மர்மத்தை நீக்கவேண்டிய பொறுப்பு துபாய் நாட்டுக்குள்ளது என்கிறார்கள் புலானாய்வு அதிகாரிகள். 
 
மர்மத்தை விலக்க வேண்டியுள்ளது மர்மத்தை விலக்க வேண்டியுள்ளது பிரேதபரிசோதனைக்குப்பிறகு இன்று மும்பைக்கு ஸ்ரீதேவியின் உடல் கொண்டுவரப்படுகிறது. ஒருவேளை துபாய் அரசு ஸ்ரீதேவியின் மரணத்தில் உள்ள மர்மத்தை போக்கத்தவறினால், இந்தியா அரசு மறு பிரேதபரிசோதனை செய்யவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஓய்வு பெற்ற மூத்த சிபிஐ புலானாய்வு அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை: