வெப்துனியா :சில நாட்களுக்கு முன்பு ஆசிட்டால் எரிக்கப்பட்ட தனியார் நிறுவன பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சென்னை மடிப்பாக்கத்தில் ராஜா என்பவர் தனியார் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இங்கு யமுனா என்ற பெண் பணியாற்றி வந்தார். அந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வருமாறு ராஜா அழைக்க யமுனா அங்கு சென்றுள்ளார்.
அப்போது, யமுனாவிற்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. யமுனா கூச்சலிடவே ஆத்திரமடைந்த ராஜா யமுனா மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் படுகாயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதையடுத்து, யமுனா மீது ஆசிட் ஊற்றி எரித்த ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி யமுனா இன்று மரணமடைந்தார். அவருக்கு 4 வயது பெண் குழந்தை இருக்கிறது. மனைவியை பிரிந்த யமுனாவின் கணவரும், தாயை பிரிந்த 4 வயது பெண் குழந்தையும் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக