திங்கள், 26 பிப்ரவரி, 2018

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மீண்டும் மீண்டும் பிளாஸ்டி சேர்ஜரியில் நம்பிக்கை வைத்தாரா ? ...

Actress Sri Devi death may be linked to the plastic surgeries she underwent to change her appearance. She was only 54 and seemingly fit.
Esther Nathaniel : அண்மையில்  மறைந்த நடிகை ஸ்ரீ தேவி ஒரு சத்திரசிகிச்சை செய்தார் காரணம் அவருக்கு ஒரு முக்கியமான படம் ஒன்று கைக்கு வந்ததால் இந்த சத்திர சிகிச்சை செய்துள்ளார் ஏற்கனவே அவர் தன் அழகை மெருகூட்ட இந்த அயோக்கிய உலக மயக்கத்தில் ரசிகனுக்காக விலை போனவர்.மிகவும் சிரமபட்டு அந்த அழகை காப்பாற்றியுள்ளார்.
சினிமாவும் பாருங்களேன் இத்தனை வயதிலும் பதினாறு வயது பருவம ங்கை மயிலன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி உசுர எடுக்கவச்சிட்டது அம்மணி நல்ல நடிகை கமலுடன் ஒரு கலக்கல்தான் .
ஸ்ரீதேவியை இளமை சற்றும் குறையாமல் வைத்திருக்க சினிமா உலகம் விரும்பியது நடிகையும் அதையே விரும்பினார் அவரின் முகத்தில் விழுந்த முதுமையை ஏதேதோ செய்து துரத்த விரும்பினார் கடைசியில் மரணத்தை துரத்த முடியவில்லை
இந்த பொருள்முதல்வாத உலகம் பெண்களை காட்சி பொருளாக்கிவிட்டது
ஆண்கள் பெண்களையே ரசிக்கவேண்டும் ஆகவே அவர்களின் கண்களை நோக்கி இந்த பொருள்முதல்வாத சிந்தனையை உலக சந்தை அரிதாரம் பூசுகின்றது
அழகியாகிட ஆளாய் பறக்கிறார்கள்
கேரள பெண்களா தமிழ் பெண்களா அழகு ஆறாம் அறிவில்லாத கூட்டம் விவாதம் வைக்கிறார்கள்
இவையெல்லாம் சந்தைகளின் நுகர்வும் சிற்றின்ப மாயைக்குள் சற்று நேரம் மனிதனை நனைய விடுவதே
நடிப்பை விட அவளின் இளமையை உடலை கொண்டாடும் தரம்கெட்ட சினிமா சிந்தானையுள்ளவர்கள்
நாம்
வெளிச்சத்தினை தின்று நூறு வருட வாழ விரும்பும் எரீந்தப் பின்னரே நாம் விட்டில்கள் என உணருகிறோம்
ஸ்ரீ தேவியின் இந்த அதீத மாயை அவரை அல்ப ஆயுசில் அள்ளி சென்றுவிட்டது
இதற்கு தக்க உதாரணம் மைக்கல் ஜெக்சன் (Michel Jackson)தன் அமெரிக்க ஆப்பிரிக்க நிறத்தை வெல்ல நினைத்த அருமையான கலைஞன் பாடுவான் ஆடுவான் அடடா எத்தனை பரிதாபமாய் மரித்தான் ஒரு செய்தியில் வாசித்தேன் அவர் கிட்டத்தட்ட 270 தடவைகளுக்கு மேல் தன் முகத்தை நிறத்தை மாற்ற போராடினான் என்று
அழகை யார் தக்க வைக்க முடியும்
பொருள்முதல்வாதம் எவரை விட்டு வைத்தது
சினீமா நடிகைகள் ஆளாய் பறக்கிறார்கள் நான் முண்ணனி நீ முண்ணனி என்று உடலை வருத்தி உள்ளத்தை வருத்தி கடைசியில் பாடையில் போகும் நிலையாகி விட்டது
இயற்கை அழகு என்பது பால் போன்றது யார் கை வைத்தாலும் திரிந்து விடும் இயற்கையில் யார் அதில் கைவைத்தாலும் அது கெட்டுவிடும் என்பது நிதர்சனம்
இவ்வளவு பணம் நேரத்தை செலவு செய்து காப்பாற்றிய அழகு இளமை ஸ்ரீதேவிக்கு என்ன நன்றிக் கடன் செய்தது??
போய் வா தேவீ இந்த ரசிகர்கள் இன்னுமொரு மாத நினைப்பார்கள் ஊடகம் உன் படத்தின் பாடலை போட்டு மூட் ஏத்துவார்கள் பின்னார் நயன்தாராவின் அழகின் ரகசியம் என்றதும் அவளுடைய இடுப்பை அளந்துக் கொண்டிருப்பார்கள் இந்த சொற்ப இன்பத்தை வழங்கவும் மாயையின் கண்ணாடியில் நீ இழந்தது உன் விம்பத்தை அல்ல நிஜத்தை!!
ஸ்ரீ தேவிக்கு இரங்கல்! !

கருத்துகள் இல்லை: