“கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். 'இந்திய நாட்டின் வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு செல்லுவதற்காக ப.சிதம்பரம் தொடர்ந்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதிவருகிறார். அவரது கட்டுரையில் உள்ளபடி மோடி அரசு நடந்து கொண்டாலே குறைகளை திருத்திக் கொள்ள முடியும். ஆனால், சிதம்பரத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மோடி அரசு குறுக்கு வழியில் அரசியல் லாபம் தேடுவதற்காக கைது நடவடிக்கை எடுக்கிறது. இது உள்நோக்கம் கொண்ட கைது... தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு உதாரணமானவர் கார்த்தி. இந்த சல சலப்புக்கெல்லாம் காங்கிரஸ் அஞ்சாது!’ - இப்படித்தான் பல ஊர்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பொங்கினார்கள்.
ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் முக்கியக் கட்சியான காங்கிரஸின் தேசிய அளவிலான தலைவரான ப.சிதம்பரத்தின் மகன் கைது பற்றி திமுக அதிகார பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
அதே நேரம் சமூக தளங்களில் திமுக அபிமானிகள், ‘அதே பாட்டியாலா’ என்று ஸ்டேட்டஸ் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதாவது 2ஜி வழக்கில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை சிக்க வைத்து அவர்களை பாட்டியாலா சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தியதில் சிதம்பரத்துக்கும் பங்கிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லி, இப்போது அதே பாட்டியலா நீதிமன்ற வளாகத்தில் கார்த்தி சிதம்பரமும் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்ற மகிழ்ச்சியை திமுகவினர் சமூக தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
கார்த்தி கைதுக்கு திமுக தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை என்பது பற்றி டெல்லியிலும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ‘திமுக நம்மை வேண்டாம் என்று நினைப்பதால்தான் அமைதியாக இருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதற்கு டெல்லியில் பேசிய தலைவர் ஒருவரோ, ‘ராகுல்ஜியோட டார்கெட் 2024 தேர்தல்தான். எப்படியும் வரப்போற தேர்தலில் பிஜேபி எதாவது தில்லு முல்லு செஞ்சு ஆட்சியை பிடிச்சிடும்னு அவரு சொல்லிட்டு இருக்காரு. இப்போ அவங்க வந்தா என்ன... வராட்டி என்ன? அவங்களே நம்மை தேடி வர வைக்கணும். நாம போய், எங்களோட இருங்க... என கெஞ்சிட்டு இருக்க முடியாது’ என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டுப் பிரமுகரோ, ‘தமிழ்நாட்டில் இப்போ தினகரனுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. எப்படியும் அதிமுக பிஜேபியுடன் தான் கூட்டணி வைக்கும். தினகரனை இப்போது இருந்தே பேசி வெச்சிருந்தா நம்ம பக்கம் கொண்டு வந்துடலாம். திமுக இல்லை என்ற சூழ்நிலை வந்தால் தினகரனுடன் கூட்டணி சேரலம். தினகரனிடம் பேசுவது பெரிய விஷயம் இல்லை. நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் முன்பு அங்கிருந்தவர்தான். அவருக்கும் தினகரனுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அதனால் அவரே பேசி கூட்டிட்டு வந்துடுவாரு...’ என்று சொல்லி இருக்கிறார்.
இதுதொடர்பாக டெல்லியில் இருந்து திருநாவுக்கரசருடனும் பேசியதாக சொல்கிறார்கள். ஆக, திமுக இல்லை என்றால் தினகரன் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருக்கிறது’ என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். “காங்கிரசின் கவனம் தினகரன் பக்கம் என்றால் தினகரனும் காங்கிரஸ் உடனான அணிச் சேர்க்கைக்கு ஆயத்தமாகவே இருக்கிறார் என்கிறார்கள் அவரது வட்டாரத்தினர். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளின் போது தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதா மாநிலங்களவையில் ஆற்றிய உரைக்காக அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தியாலேயே பாராட்டப் பட்டவர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதே அறிக்கையில் துரோகிகளுக்கு ஆதரவாக இப்போதைய மத்திய அரசு இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். ஆக, ஜெயலலிதாவையும் இந்திராகாந்தியையும் இணைத்துக் குறியிட்டதன் மூலம் காங்கிரஸ் அணிக்காக தினகரன் தயாராகிறார் என்பதை, ‘காங்கிரஸ் பக்கம் சாயும் தினகரன்’ என்று மின்னம்பலத்திலேயே செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும் வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் டெல்லி வரை தனக்கு இருக்கும் பல பிரச்னைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கருதுகிறார் தினகரன்’’ என்று முடிந்த அந்த செய்திக்கு சென்ட் கொடுத்தது.
இதைப் படித்து ஒரு ஸ்மைலியை வெளிப்படுத்திய ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டசை மீண்டும் புதுப்பித்தது.
“அதிமுக அலுவகத்தில் நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலையை செய்த சிற்பி பிரசாத் நேற்று சென்னை வந்திருக்கிறார். அமைச்சர் வேலுமணியின் வீட்டில் வைத்து அவருடன் ஆலோசனை நடந்திருக்கிறது. ’கோவையில் நீங்க செஞ்சதைப் பார்த்துதான் நீங்களே செய்யட்டும்னு முதல்வர் சொன்னாரு. எப்படி இப்படி சொதப்புச்சு...’ என வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் அவரிடம் விசாரித்திருக்கிறார்கள். அதற்கு சிற்பி சில விளக்கம் கொடுத்திருக்கிறார். அத்துடன் புதிதாக வார்த்தெடுத்த சில மாடல் சிலைகளின் மாதிரிகளையும் அமைச்சர்களிடம் காட்டி இருக்கிறார். அந்த மாதிரி சிலைகளின் வார்ப்புகளுடன் முதல்வரை சந்தித்திருக்கிறார்கள்.
2015-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ படத்துடன் ஒத்துப்போன ஒரு மாதிரி உருவத்தை ஓகே செய்திருக்கிறார் எடப்பாடி. ‘இதையாவது சரியா செய்யுங்க... மறுபடியும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்திடாதீங்க...’ என சொன்னதுடன், ’சிலை வேலை முடிஞ்சதும் சொல்லுங்க. நாங்க வந்துப் பார்க்கிறோம். அதுக்குப் பிறகு சிலையை சென்னைக்கு கொண்டு வந்தால் போதும்’ என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார் எடப்பாடி.” என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக