புதன், 28 பிப்ரவரி, 2018

கலைஞரின் பாதுகாப்பு அதிகாரி ஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் !

 பாண்டியன் கருணாநிதிvikatan -MUTHUKRISHNAN S : தி.மு.க தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரி டி.எஸ்.பி., பாண்டியன். இன்று ஓய்வுபெற இருந்த அவர்,  திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிவுசெய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதால், துறைரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், ”தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பாண்டியன், கணேசன், விநோதன் ஆகியோர், முகப்பேர் வீட்டு வசதி வாரியத்தில் தலா 2 கிரௌண்டு இடம் வாங்கினர். அதை, வீட்டு வசதி வாரியத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பாக இவர்கள், அந்த இடத்தைத் தனியாருக்கு விற்றனர். ஒவ்வொரு அதிகாரியும் 19 லட்சம் வீதம் சட்டவிரோதமாக லாபம் அடைந்தனர். இதனால், வாரியத்துக்கு இழப்பீடு ஏற்படுத்தினர்.

1.3.12 அன்று, இவர்கள் மூன்று பேர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்கணிப்புத் துறையால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூன்று பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இப்போது, டி.எஸ்.பி- யாக இருக்கும் பாண்டியன் இன்று ஓய்வுபெற இருந்த நிலையில், அவர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, வழக்கமான ஒன்றுதான்” என்றார்கள்.
vikatan.com

கருத்துகள் இல்லை: