Gajalakshmi" Oneindia Tamil<
மாணிக் சர்க்கார் 5வது முறையாக அரியணையில் அமருவாரா?
அகர்தலா
: திரிபுரா சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி த்ரில் முடிவுகள் வெளியாகி
வருகின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, பாஜக மாறி மாறி முன்னிலை வகிப்பதால்
தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக உள்ளன.
திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது பாஜக, அமைதி வளர்ச்சிக்காக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்தன. இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவு டிரெண்டில் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை வகித்த நிலையில் அடுத் சுற்றில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. கடைசியாக கிடைத்த தகவல்படி இடது சாரி கட்சிகள் 25 இடங்களிலும், பாஜக கூட்டணி 34 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக