செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை ஓங்கி வயிற்றில் குத்திய மாமியார் .. ராம் கோபால் வர்மா

மகிழ்ச்சி Siva Oneindia Tamil : ராம்கோபால் வர்மா உருக்கமான பதிவு- வீடியோ ஹைதராபாத்: கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை போனி கபூரின் தாய் வயிற்றில் குத்தியதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலின் பாத்ரூமில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரது மறைவால் ரசிகர்கள் குறிப்பாக இயக்குனர் ராம் கோபால் வர்மா மிகுந்த கவலையில் உள்ளார்.
 ஸ்ரீதேவியை அதற்குள் அழைத்துக் கொண்டதால் கடவுளை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஸ்ரீதேவியை கொன்றதால் கடவுளை வெறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


 ஸ்ரீதேவி முதன்முறை கர்ப்பமாக இருந்தபோது போனி கபூரின் தாய் அவரின் வயிற்றில் ஓங்கி குத்தியதாக ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். போனி கபூர் மோனாவின் கணவராக இருந்தபோது தான் ஸ்ரீதேவியை காதலித்து தனது மனைவியையும், 2 குழந்தைகளையும் பிரிந்தார்.

 ஸ்ரீதேவி எப்பொழுதுமே கவலையுடன் வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் பெரிதாக சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை. தனக்குள் நடப்பதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க யாருடனும் நெருங்கிப் பழகாமல் இருந்தார் என்கிறார் ராம் கோபால் வர்மா.

 போனி கபூரை திருமணம் செய்த பிறகு ஸ்ரீதேவியை பார்ப்பவர்கள் அடிக்கடி சொன்னது அவர் கண்களில் சோகமும், கவலையும், பயமும் தெரிகிறது என்பது தான். ராம் கோபால் வர்மாவும் அதையே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: