திங்கள், 26 பிப்ரவரி, 2018

எலும்பு திருட்டு குற்றச்சாட்டு - பச்சைத் தமிழகம் கட்சி கண்டனம், கோரிக்கை அறிக்கை


எலும்பு திருட்டு குற்றச்சாட்டு - பச்சைத் தமிழகம் கட்சி கண்டனம், கோரிக்கை அறிக்கை
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் உள்ள "செயின்ட் ஜோசப்" கருணை இல்லத்தில், ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள், நல்வுள்ளங்களின் நன்கொடையால், பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சராசரியாக 3 பேர்
நாள்தோறும் மரணமடைவதாக கருணை இல்லத்தின் நிர்வாகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியும் நிலையில், எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்ககூடும் என்று வருகிற தகவல்கள் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்கள், தமிழக தெருக்களில் இருந்து உதவுகிறோம் என்ற பெயரில் அழைத்துவரப்பட்டுள்ளார்கள். பொது மக்களிடம் நன்கொடை பெற்றே இல்லம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அழைத்து வரப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் விருப்பம் இன்றியே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பணத்திற்காக அவர்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாகவும், அவர்களின் உடல் அழுகிய பிறகு எழும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முதியவர்கள் இயற்கை மரணமடைகின்றனரா அல்லது அவர்களின் எலும்புகளுக்காக கொல்லப்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுப்பபட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த சர்ச்சைக்குரிய கருணை இல்லத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. மக்களுக்கு இதன் மூலம் உண்மை விரைவில் தெரியவரும் என்று நம்புகிறோம். மானுடவியலுக்கு எதிரான இந்த செயலை, பச்சைத் தமிழகம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
மேலும், 1985ல் இந்திய அரசு எலும்பு ஏற்றுமதியை தடை செய்தப் போதும், மருந்து ஆராய்ச்சி, பயிற்சிக்கு தேவைப்படும் எலும்புகள் உலகளவில் இந்திய கள்ள சந்தையில் இருந்தே செல்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில், இந்த நடவடிக்கைகளை ஒரு இல்லத்தில் நடந்த செயல் என்று மட்டும் விசாரித்திடாமல், விசாரனையை
தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான முதியோர் இல்லங்களுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும்.
மேலும், எலும்பு திருட்டு என்றளவில் சுருங்கிடாமல், உறுப்புகள் திருட்டு என்ற கோணத்திலும் அணுகி, உடனடியாக தமிழக முழுவதும் உள்ள அனைத்து கருணை இல்லங்களையும் விசாரித்து, முறைப்படுத்திட வேண்டும்.
உறுப்பு, எலும்பு கள்ள சந்தையை அறிந்திட, தடுத்திட, போர் கால அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளையும், மருத்துவ கல்லூரிகளையும் விசாரனை வலையத்துக்குள் கொண்டு வரவேண்டும். உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், எலும்பு பரிவர்த்தனைகளை உடனடியாக விசாரித்திட வேண்டும்.
இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு, தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விசாரனையை தமிழகம் முழுவதும் கருணை இல்லங்கள், மருத்துவமனை, கல்லூரிகளுக்கு, விரிவுப்படுத்திட வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
சுப.உதயகுமாரன்,
தலைவர்,
பச்சைத் தமிழகம் கட்சி.

1 கருத்து:

Unknown சொன்னது…

மனித எலும்புகள் பற்றி அறிவோம்
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D)