பாரீஸில் பொதுப் போக்குவரத்து இலவசம் Paris promises free public transport if high pollution continues
Authorities in the Paris region say
they will make public transport free if they have to bring in emergency
restrictions on traffic because of high pollution levels caused by
unseasonably warm weather.
பாரீஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வளி மண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது.
இதன் காரணமாக அந்த நகரம் மாசுபடுதலின் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில
நாட்களாக ஃப்ரான்சில் ஏற்பட்டுள்ள திடீர் குளிரினால் பாரீஸ் முழுவதும்
காற்று இல்லாமல் போனது.
மேலும், வாகனங்கள் வெளியேற்றும் நச்சு புகையும், குளிரைப் போக்கிக் கொள்ள
மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் ரேடியேட்டர் கருவிகளும் சுற்றுப்புறச்சூழல்
மாசுபடுவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது.
இதையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,
வாகனங்களின் புகையை தவிர்க்கவும் அங்கு மூன்று நாளைக்கு பொதுப்போக்குவரத்து
முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் இந்த பொதுப்
போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று நகர போக்குவரத்து அமைப்புத் தலைவர்
ஜீன் பால் ஹூச்சோன் கேட்டுக் கொண்டுள்ளார். லாரிகள் போன்ற வர்த்தக
வாகனங்களை நிறுத்தி வைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக