திங்கள், 10 மார்ச், 2014

பாமக திடீர் முடிவு ? பி.ஜே.பி கூட்டணி உடைகிறது !

ரங்கசாமி–அன்புமணி ராமதாஸ்
இரவில் திடீர் சந்திப்
பு
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. புதுவை பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் பா.ம.க. போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி புதுவை தொகுதி வேட்பாளராக பா.ம.க. மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனந்தராமன் அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக பி.ஜே.பி அமைக்கும் கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேமுதிக, பாமக, மதிமுக, பிறஇயக்கங்கள் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளன.
தேமுதிக சார்பில் பேச்சு வார்த்தை நடத்தவிஜயகாந்த் மச்சான் சுதிஷ் தலைமையிலும், பாமக சார்பில் கட்சி தலைவர் கோ.கா.மணிதலைமையிலும் குழு அமைத்துள்ளார்கள். அவர்கள் கமலாயத்தில் தமிழக பி.ஜே.பி தலைவர்பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் தேமுதிக 18 சீட் வரை கேட்டு டிமாண்ட் செய்கிறது. பாமக தனக்கு 10 என்றும், தன்னுடன் உள்ள அனைத்து சமுதாயகட்சிகளின் கூட்டணிக்கு 4 என டிமாண்ட் செய்கிறது. மதிமுக 8 இடங்களை எதிர்பார்க்கிறது. இவர்களோடு புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே கட்சி போன்ற சின்ன சின்னகட்சிகள் தங்களுக்கு 2 சீட் என பி.ஜே.பியுடம் கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருப்பதே 39 சீட் தான். கூட்டணிக்கு வருபவர்கள் கேட்கும் சீட் எண்ணிக்கையை கூட்டினால் இதைவிட அதிகமாக வருவதை கண்டு அதிர்ச்சியில் உள்ளது பி.ஜே.பி தலைமை.
முதல் கட்டமாக தேமுதிக, பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள பி.ஜே.பி தரப்பு, தேமுதிகவுக்கு 14,பி.ஜே.பிக்கு 8, பாமகவுக்கு 8, மதிமுகவுக்கு 6, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி உட்பட மற்ற கட்சிகளுக்கு தலா ஒன்று என்ற கணக்கில் உள்ளது.


தேமுதிகவோ, எங்களுக்கு 12சதவித ஓட்டு உள்ளது. அதனால் எங்களுக்கு தான் அதிக சீட் 16க்கு குறையக்கூடாது என்கிறது. பாமகவும் தங்களுக்கான தொகுதிகளில் பிடிவாதமாக உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் திடீரென தைலாபுரத்தில் இன்று (9.3.2014) மதியம் முக்கிய கட்சி பிரமுகர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார் மருத்துவர் ராமதாஸ்.
கூட்டம் பற்றி பாமக தரப்பினர் நம்மிடம்,பாமக தரப்பில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டோம். அவர்கள் தேர்தல் வேலையை தொடங்கிவிட்டார்கள். அவர்களை வாபஸ் வாங்குவது என்பது சாத்தியம்மில்லை.  வேண்டுமானால் ஒரு தொகுதியில் இருந்து வாபாஸ் வாங்குகிறோம். ஆனால் எங்களுக்கு தருமபுரி நிச்சயம் தேவை. 10 தொகுதி பாமகவுக்கு, அய்யா ராமதாஸ் தலைமையில் உள்ள அனைத்து சமுதாய கூட்டணிக்கு 4 தொகுதிகள் வேண்டும் என பி.ஜே.பியிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய குழுவிடம் வலியுறுத்தச்சொன்னார். பி.ஜே.பியோட 8 சீட் தான் என்பதில் உறுதியாக உள்ளது.
இது அய்யாவிடம் கூறப்பட்டது. அடுத்துஎ ன்ன செய்வது என ஆலோசிக்கவே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் காடுவெட்டி குரு உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர். அதில், அனைத்து சமுதாய கூட்டணிக்கும் சீட் வேண்டும். அதை விட்டு தர முடியாது. அவர்களுக்கான சீட்டுக்கு ஓப்புக்கொண்டால் மட்டுமே கூட்டணி. நாளை வலியுறுத்துங்கள் என முடிவு செய்துள்ளார்.

அதோடு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இந்த தகவலை பாஸ் செய்யுங்கள் என்று ஒரு தகவலை கூறியுள்ளார்.  அதாவது, 10 மற்றும் 4 இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பி.ஜே.பியுடன் கூட்டணி. ஒப்புக்கொள்ளவில்லையென்றால் கூட்டணியில்லை. அனைத்து சமுதாய இயக்கத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள். நாளை மாலை அல்லது நாளை மறுதினம் முடிவு தெரிந்துவிடும் என தகவல் சொல்லுங்கள் எனக்கூறியுள்ளார். இந்த தகவல் கட்சியினரிடையே வேகமாக பரவிவருகிறது.
இதனால் பி.ஜே.பி அமைக்கும் கூட்டணியில் பாமக கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா? கூட்டணி தொடருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 -    ராஜா nakkheeran.in

கருத்துகள் இல்லை: