அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதிகூட ஒதுக்காததால், சரத்குமாரின்
சமத்துவ மக்கள் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமக்கு
செல்வாக்குள்ள மூன்று மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் உள்ள ஒரு தொகுதியில்,
ராதிகாவை நிறுத்துவது என்ற சரத்குமாரின் திட்டமும் அம்பேல்.
இதனால், அ.தி.மு.க. பிரசாரத்தில் பங்கேற்காமல் ச.ம.க. தொண்டர்கள்
ஒதுங்கி நிற்கின்றனர். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா?
நீடித்தாலும் தேர்தலில் இவர்களால் ஏதாவது பலன் கிட்டுமா என்பது
கேள்விக்குரியாக உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட்களை கழற்றிவிட்டதால் பெயர் சொல்லும்
அளவுக்கு பெரிய கட்சிகள் ஏதும். ஆனால், ஜெயலலிதா எடுக்கும் முடிவுக்கு
எல்லாம் கடந்த 3 ஆண்டுகளாக ஆமாம் சாமி போட்ட சரத்குமார், நாடாளுமன்றத்
தேர்தலில் அ.தி.மு.க. தங்களுக்கு சீட் ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பில்
காத்திருந்தார
இந்த ராதிகா இருக்காகளே தான் ஏதோ பெரிய இண்டேலேகுசுவல் ரேஞ்சுக்கு பீலா விடுவார் .கேவலம் ஜெயலலிதாவிடம் போய் சேர்ந்தது எதுக்காகவாம் .அப்பா அப்பான்னு கோபாலபுரம் சுத்திவிட்டு .....
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ச.ம.க.வுக்கு
செல்வாக்கு உள்ளதால், இவற்றில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுப் பெறுவது
என்றும் அந்தத் தொகுதியில் ராதிகாவை நிறுத்தலாம் என்றும் சரத்குமார் முடிவு
செய்திருந்தார். பின்னர், “அம்மாவே ஏதாவது போட்டு (சீட்) கொடுப்பார்,
நாங்கள் கேட்கப்போவதில்லை” என சரத்குமார் கூறி வந்
இந்நிலையில், பிப்வரி 16-ம் தேதியன்று நெல்லையில் ச.ம.க.வின் 2-வது
மாநில மாநாட்டை நடத்திய சரத்குமார், கூட்டத்தைக் கூட்டி ஜெயலலிதாவுக்கு
தனது பலத்தையும் நிரூபித்தார்.
ஆனால், இதற்கெல்லாம் ஜெயலலிதா அசைந்து கொடுக்கவில்லை.
தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்குதங்களை அ.தி.மு.க.
அழைக்கும் என எதிர்பார்த்திருந்த சரத்குமாருக்கு இறுதியில் ஏமாற்றமே
மிஞ்சியுள்ளது. இதனால் ச.ம.க. கட்சியினர் அ.தி.மு.க. தலைமை மீது கடும்
அதிருப்தியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, தென்காசி சட்டசபை தொகுதிகளில்
ச.ம.க. வெற்றி பெற்றதால், நெல்லை எம்.பி. தொகுதி தங்களுக்குதான் என
ச.ம.க.வினர் மனக்கோட்டை கட்டி வந்தனர். அந்தக் கோட்டையைத் தகர்க்கும்
வகையில் ச.ம.க.வை அ.தி.மு.க. கண்டுகொள்ளவே இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத குறையைப் போக்க நாங்கள் உங்களுக்கு பக்க
பலமாக இருக்கிறோம் என லெட்டர் பேட் கட்சித் தலைவர்களெல்லாம் கடந்த சில
நாட்களாக ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஆனால்,
சரத்குமார் இதுவரை ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை. மேலும், அ.தி.மு.க.
வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களிலும் ச.ம.க.வினர் யாரும் பங்கேற்கவில்லை.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரசாரத்துக்குச்
செல்வாரா? இது பற்றிய தகவல் ஏதும்கூட ச.ம.க. தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
கம்யூனிஸ்ட்டுகள் அம்மா முகாமில் இருந்து வெளியேறி சென்றதுபோல,
சரத்குமார் கிளம்புவது சந்தேகமே. ஆனால், அதைவிட பெரிய சந்தேகம், தேர்தலில்
சரத்குமார் கட்சியினர் அ.தி.மு.க.வுக்காக வேலை செய்வார்களா என்பது!
viruvirupu.com
1 கருத்து:
thattula saapade iellayam, apparam yappadi sappudaradhu?
கருத்துரையிடுக