பாராளுமன்ற
தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது.
பாரதீய ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல்
நீடித்து கொண்டே இருப்பதால் வேட்பாளர்கள் அறிவிப்பதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
இது தவிர கம்யூனிஸ்டு கட்சிகளும் தனியாக களத்தில் குதிக்கிறது. காங்கிரசும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
தற்போது அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 35 தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.
இந்த இரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக பாரதீய ஜனதா கூட்டணி உருவாகி வருகிறது. பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இடம் பெற்றுள்ளதால் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பா.ஜனதா கூட்டணி சற்று பலம் பெற்று உள்ளது.
இதனால் ஆரணி, விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய தொகுதிகளில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக உருவாகி உள்ளது.
இவை உள்பட 20 தொகுதிகளில் பாரதீய ஜனதா எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்களை பிரிக்கும் சக்தியாக உருவாகி உள்ளது.என்றாலும் அந்த கூட்டணி ஓட்டுக்களை பிரிப்பதால் அது அ.தி.மு.க. வெற்றிக்கு சாதகமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
வன்னியர்கள், கவுண்டர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த மண்டலங்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் வன்னியர்கள், கவுண்டர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி போட்டியை சமாளிக்கின்றன.
பா.ம.க.வை சமாளிக்க அ.தி.மு.க. சார்பில் 8 வேட்பாளர்கள் வன்னியர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. சார்பில் 4 பேர் மட்டுமே வன்னியர்களாக நிறுத்தப்பட்டுள்ளதும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
தி.மு.க. சார்பில் கவுண்டர்கள், தேவர்களுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக