செவ்வாய், 11 மார்ச், 2014

காங்., தனித்து விடப்பட்டதற்கு ஆசாத்தே காரணம்'ஆத்திரத்தில் TN Congress தலைவர்கள்

கூட்டணி எப்படியும் அமைந்துவிடும் என்று, கடைசி வரை, நம்பிக்கை கொண்டிருந்த சூழ்நிலையில், தங்களை கழற்றி விட்டுவிட்டு, வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., அறிவித்து விட்டதால், காங்., ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துஉள்ளது. கூட்டணி அமையாமல் போனதற்கு, குலாம்நபி ஆசாத்தின், குளறுபடியான அணுகுமுறையே காரணம் என்றும் தெரியவந்துள்ளது உச்சகட்ட வேலைகள்:பொதுக்குழுவில், என்ன தான் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று, தி.மு.க., அறிவித்தாலும், கடைசி நேரத்தில், எப்படியும் சூழ்நிலைகள் மாறும் என்று, எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலின் மட்டுமே, கடும் எதிர்ப்பு காட்டிக் கொண்டிருந்தாரே தவிர, தி.மு.க.,வின், பிற அதிகார மையங்களில், காங்கிரசுடன் இணக்கமான போக்கையே கடைபிடிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.பெரிதும் எதிர்பார்த்த தே.மு.தி.க., பா.ஜ., அணிக்கு சென்றுவிட்ட நிலையில், காங்கிரசை சேர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கினர். கடந்த இரண்டு நாட்களாக, இதற்கான உச்சகட்ட வேலைகள், இருதரப்பிலும், தீவிர மாக நடைபெற்று வந்தன. ஆனால், நேற்று மதியம், தி.மு.க.,வோ, திட்டமிட்டபடி, வேட்பாளர் பட்டியலையே அறிவித்துவிட்டது. இது, காங்கிரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


இதுகுறித்து, காங்., வட்டாரங்களில் கூறியதாவது:
தி.மு.க., - காங்., கூட்டணி, அமைய முடியாமல் போனதன் பின்னணியில், காங்., மூத்த தலைவர்கள், அகமது படேலும், குலாம்நபி ஆசாத்தும், இருந்தனர். ஆரம்பம் முதலே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை, தமிழக சூழ்நிலை தெரியாமல், தங்கள் இஷ்டம் போல, இருவரும் நடத்தி வந்தனர்.திட்டமிட்டு, சரியான அணுகுமுறையுடன், தி.மு.க.,வோடு பேசியிருந்தால், இந்த நிலைமை, காங்கிரசுக்கு வந்திருக்காது. யாருக்குமே தெரியாமல், பூடகமாகவே, பேச்சுவார்த்தை நடத்தியது தான், பிரச்னைக்கு காரணமாகிவிட்டது. கூட்டணி குறித்து, தமிழக காங்., தலைவர்கள், யாரையும் சம்பந்தப்படுத்த வில்லை.


கூட்டணி பேசவில்லை



தனது ஆதரவாளரான, தங்கபாலுவை மட்டும் வைத்துக் கொண்டு, அவர் மூலமாகவே, அனைத்தையும், குலாம்நபி ஆசாத், செய்து வந்துள்ளார். கடந்த பிப்ர வரியில், சென்னைக்கு வந்து, கருணாநிதியை பார்த்தபோது, தமிழக காங்., தலைவர், ஞானதேசிகனுக்கு தகவல்கூட இல்லை. விமான நிலையத்தில் வைத்து, ஞானதேசி கன் கேட்டபோது, 'கூட்டணி பற்றி யெல்லாம் பேசவில்லை' என்று மட்டுமே, குலாம்நபி பதிலளித்து உள்ளார்.அதன்பிறகும் கூட, நிலைமைகள் மாறவில்லை. கூட்டணி குறித்து, தி.மு.க., தரப்பில், கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகிய மூன்றுபேருடன் தான், காங்., மேலிடம், பேசி வந்திருக்கிறது. ஒரு சில நேரங்களில், கருணாநிதியை நேரடியாகவே கூட, தொடர்பு கொண்டும், பேசியிருக்கின்றனர்.


திக்கு தெரியாத காட்டில்:



இந்நிலையை வசதியாகப் பயன்படுத்தி, கூட்டணியை இறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யாமல் இறுமாப்புடன் செயல்பட்டு, தி.மு.க.,வை விட்டுவிட்டனர். இப்போது, யாருடன் கூட்டணி அமைப்பது என்று புரியாமல், திக்குத் தெரியாத காட்டில் நின்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், கூட்டணி அமைக்கும் நடவடிக்கைக்கு, பொறுப்பு ஏற்றிருந்தவர்கள் குலாம்நபி ஆசாத்தும், அகமது படேலும் தான். இவர்களுக்குள்ளேயே இணக்கம் இல்லை. அப்படியிருப்பவர்கள், எப்படி இணைந்து, ஒத்த எண்ணத்தில் செயல்பட்டு, கூட்டணியை பேசி முடிக்க முடியும்?தமிழக காங்கிரசில், சிட்டிங் எம்.பி.,க் கள், 8 பேரிடமோ, தமிழக காங்கிரசின் முக்கியமான தலைவர்களிடமோ கூட, கூட்டணி விஷயமாக, மேலிடத் தலைவர்கள் யாரும் விவாதிக்கவில்லை. காமராஜர் காலத்திற்கு பின், முதன்முறையாக, இப்போது தான், தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்காக, காங்., தனித்து விடப்பட்டிருக்கிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர்  dinamalaar.com

கருத்துகள் இல்லை: