தயாளன் இயக்கத்தில் தெனாலிராமனாகவும், மன்னராகவும் வடிவேலு இரட்டை
வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம். ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். ராஜா
காலத்து கதை என்பதால் அரண்மனை, கோட்டைச்சுவர், நகர அமைப்பு என அனைத்தும்
மிகப்பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தி
முடித்துள்ளனர்.
கலை
இயக்குனர் M.பிரபாகரிஅனின் மிகப்பெரிய அரங்குகளும், ஒளிப்பதிவாளர்
ராம்நாத் ஷெட்டியின் தத்ரூபமான ஒளிப்பதிவும், கலைவித்தகர் ஆரூர்தாஸின்
சிரிப்பும், சிந்தனைகளும் கலந்த வசனங்களும், டி.இம்மானின் இசையும்
அற்புதமாக அமைந்து தெனாலிராமன் திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கும்
என்று முழு நம்பிக்கையில் இருக்கின்றனர் படக்குழுவினர்.கல்பாத்தி
S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில்
உருவாக்யிருக்கும் இத்திரைப்படம் சித்திரை மாதம் திரைக்கு வருகிறது.
படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது பின்னணி இசைச்சேர்ப்பு பணிகள்
நடந்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக