அ.தி.மு.க., தரப்பில், முதல்வர், ஜெயலலிதா பிரசாரம் துவக்கி விட்டார். எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி விட்டது. ஆனால், பா.ஜ., கூட்டணியில், நேற்று வரை, தொகுதி பங்கீடே முடியவில்லை. ஆனாலும், தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்ப முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.இரண்டு முறை வலம்வரும், 14ம் தேதி திருவள்ளூர் (தனி) தொகுதியில் இடம்பெற்றுள்ள, கும்மிடிப்பூண்டியில், விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளார். எல்லாருக்கும் தெரிஞ்சது தானே ? .... தே.மு.தி.க காரன் , ப.ம.க வுக்கு வோட்டு போடா மாட்டான் .. பா.ம.க காரன் தே.மு.தி.க , ம.தி.மு.க விற்கு வோட்டு போடா மாட்டான் , ம.தி.மு.க காரன் ரெண்டு பெருக்கும் வோட்டு போட மாட்டான் ஏன்னா ... அவங்ககிட்ட வோட்டு போட யாரும் இல்லை .. இதில் குளிர் காய்ந்து வெற்றி பெற போவது பி.ஜே.பி மட்டுமே
தமிழகத்தை இரண்டு முறை வலம் வரும் வகையில், அவருடைய தேர்தல் சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.முதற்கட்ட பிரசாரத்தை, வரும், 14ம் தேதி துவக்கி, 14 நாட்கள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 27ம் தேதி முடிக்கிறார். வேட்பாளர்களை அறிவிக்காமலே, பிரசாரத்தை அறிவித்துள்ளது, தே.மு.தி.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
.இது ஒருபுறம் இருக்க, விஜயகாந்தின் பிரசார நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதாக, அக்கட்சியினர் குறைபட்டுக் கொள்கின்றனர். ஏற்கனவே, சிகிச்சைக்காக, அவர் சிங்கப்பூர் சென்று வந்த நிலையில், மிகக் குறைந்த நாளே பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது, கட்சியினருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட சுற்றுப்பயண விவரப்படி, 14 நாள் பிரசாரத்தை முடித்ததும், விஜயகாந்த், மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று விடுவாரோ என்றும், கட்சியினர் அச்சப்படுகின்றனர்.இதற்கிடையில், பாட்டாளி மக்கள் கட்சியும், பா.ஜ., கூட்டணியில் இணைந்துள்ள சூழ்நிலையில், அவர்களுக்காக பிரசாரம் செய்யவும், அவர்களோடு மேடை ஏறவும் விஜயகாந்த், விரும்பாததால், தன்னிச்சையாக பிரசாரத் திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் தகவல் பரவி, பா.ம.க.,வினர் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., இடம்பெறுவது இன்னும் முழுமை அடையவில்லை. இருந்தாலும், அவர்களோடும், பா.ஜ.,வினர் பேச்சுவார்த்தை நடத்துவதால், கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வாகனத்தில் ஏற்ற...
கூட்டணி உருவானால், பிரசாரத்தின் போது, அவர்களை புறக்கணிக்க முடியாமல் போய்விடும்.பா.ம.க., வேட்பாளர்களையும், விஜயகாந்தின் பிரசார வாகனத்தில் ஏற்ற வேண்டும். அதனால், தன் பிரசார பயணத்தை, இரண்டு கட்டங் களாக விஜயகாந்த் திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுஇருக்கிறார்.முதல் கட்டத்தில், வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்லும் அவர், பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கும் சென்று, பொதுவாக, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளியுங்கள் என, பேசிவிட்டு வந்துவிடுவார். அதன்பின், இரண்டாவது கட்டமாக, தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்வார். அப்போது, தே.மு.தி.க., போட்டியிடும் இடங்களாகப் பார்த்து பிரசாரம் செய்வார். கூட்டணி கட்சிகள் வற்புறுத்தினால் மட்டுமே, அவர்களுக்காக பிரசாரம் செய்வது குறித்து, விஜயகாந்த் யோசிப்பார்.
தேர்தல் முடியும் வரை
விஜயகாந்த் தன் முதற்கட்ட பிரசாரத்தை முடித்ததும், 27ம் தேதி சிங்கப்பூர் சென்று விடுவார் என, யாரும் அஞ்ச வேண்டாம். தேர்தல் முடியும் வரையில், அவர் தமிழகத்தில் தான் இருப்பார்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்களில் கூறினார்.இதற்கிடையில், பா.ஜ., கூட்டணி யில், தே.மு.தி.க.,வுக்கு தொகுதிகளை பங்கிடுவதில் நிலவி வந்த பிரச்னைகள், இன்றுக்குள் முடிவுக்கு வரும் என, விஜயகாந்த் நம்புகிறார். அப்படி சுமுகமாக தொகுதி பங்கீடு முடிந்தால், உடனேயே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com தமிழகத்தை விட கோமாளித்தனமான கூட்டணியில் விசயகாந்துவின் நடவடிக்கை செம ஜாலியாக இருக்கும் பாருங்கள். வேட்ப்பாளரின் பெயரை மாற்றி உச்சரிப்பார்..(வேட்பாளர் அமைதி காப்பார்..இல்லையேல்..குட்டுத்தான் என்று அவருக்கு தெரியும்) தொகுதியின் பெயரை தப்பாக சொல்லுவார். பின்னர்..முதல்வர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார். மதுவிலக்கு பற்றி அதிமேதாவித்தனமான கருத்தை கூறி எல்லோரையுமே குழப்பத்தில் ஆழ்த்துவார். ஒரே மேடையில் எல்லோருமே இருக்க பா ம கவின் கடந்த கால கோபதாபங்களை குறை சொல்லி சங்கடத்தில் ஆழ்த்துவார்..மதிமுக வைகோ அநேகமாக கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்வார். பின்னர் பா ஜ க அமைக்க இருக்கும் மந்திரி சபையில் முதல்வர் பதவி தங்களது கட்சியினருக்கே தரவேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்..யாருமே இவரிடம் விளக்கம் கூறவோ மறுப்பு தெரிவிக்கவோ முயல மாட்டார்கள்..அப்படிப்பட்ட நிலையில் கூட்டணி தமிழகத்தில்..இந்தியாவே திரும்பி பார்க்கும் தேர்தல் பிரச்சாரம் விசயகாந்து செய்வார். பா ஜ கவுக்கு பெரும் தலைகுனிவாக இருக்கும் இந்த தேர்தல்..இவரை சேர்த்து கொண்டதை நினைத்து நினைத்து..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக