சனி, 15 மார்ச், 2014

ஞானதேசிகன்: தி.மு.க.,வே காங்கிரஸ் கட்சியின் முதல் எதிரி !

தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், கட்சியின் ஓட்டு வங்கியைப் பலப்படுத்த, கோஷ்டி தலைவர்கள் துணிச்சலுடன் போட்டியிட முன்வர வேண்டும்' என, காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர்.லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளில், தமிழக காங்கிரஸ், தனித்து போட்டியிடுகிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட, 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், தற்போதைய எம்.பி.,க்கள், எட்டு பேர் இடம் பெற்றிருந்தனர்.அந்த பட்டியலுக்கு, காங்கிரஸ் தலைவர், சோனியா ஒப்புதல் அளித்து விட்டார். ஆனால், திடீரென, இரு தலைவர்கள் பெயர்களுக்கு பதிலாக, அவர்களின் வாரிசுகளின் பெயர் இடம் பெற்றிருந்தன. இதற்கு, சோனியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, 'தற்போதைய எம்.பி.,க்கள் அனைவரும் போட்டியிட வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார். ஞானதேசிகன் : திராவிட கட்சிகளின் பிடியில் இருந்தும் தமிழக அரசியலில் இருந்தும்  காங்கிரசுக்கு விடுதலை பெற்றுத் தந்த சோனியா, ராகுலுக்கு நன்றி? 

காலம் கடந்த முடிவு: இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர், ஞானதேசிகன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள்கூறியதாவது:காங்கிரசுக்கு, முதல் எதிரி, தி.மு.க., - அடுத்தது அ.தி.மு.க., தான். இரு கட்சிகளையும் தவிர்த்து விட்டு, தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பது, காலம் கடந்த முடிவு என்றாலும், இது, காங்கிரசுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கி காட்டும்.

திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து காங்கிரசுக்கு விடுதலை பெற்றுத் தந்த சோனியா, ராகுலுக்கு நன்றி. காங்கிரசுக்கு போட்டியாக திராவிட கட்சிகள் வளர்ந்தது போல், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக காங்கிரசைகிராமந்தோறும் வளர்க்க வேண்டும்.'கூட்டணி அமைந்தால் மட்டும் தேர்தலில் போட்டியிடுவோம்; மற்ற நேரங்களில் மற்றவர்கள் போட்டியிட வேண்டும்' என, தலைவர்கள் கருதுவது ஏற்புடையதல்ல. தனித்து போட்டியிடும் போது, மூத்த தலைவர்களும் போட்டியிட வேண்டும். அவர்களுக்கு என, தனிப்பட்ட செல்வாக்கு தொகுதிகளில் இருக்கும். அவர்களின் முகத்திற்காக, ஓட்டு கள் அதிகமாக கிடைக்கும். எனவே தலைவர்கள், தேர்தலில்துணிச்சலுடன் போட்டியிட முன்வர வேண்டும்.தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரை அழைத்து வர வேண்டும். கன்னியாகுமரி, மதுரை, சென்னையில், தலைவர்களை அழைத்து வந்து பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.


தொகுதி வாரியாக



வேட்பாளர்களின் தேர்தல் செலவை, கட்சி ஏற்க வேண்டும். அப்பணத்தை வேட்பாளர்களிடம் கொடுக்க வேண்டாம். அவர்கள் பாதி பணத்தை செலவழித்து விட்டு, மீதி பணத்தை சொந்தமாக்கி கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எனவே, தேர்தல் செலவு செய்வதற்கு, தொகுதி வாரியாக குழு அமைத்து, செலவு செய்ய வைக்க வேண்டும்.சிறுபான்மையினரின் ஓட்டு களை பெற, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: