நியூயார்க்:அமெரிக்காவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவியின் சடலம் காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவி ஜாஸ்மின் ஜோசப் (22). இவர் கடந்த மாதம் 24ம் தேதி மர்மமான முறையில் மாயமானார். சம்பவத்தன்று மாணவி கடைசியாக பெற்றோரிடம் தான் லைப்ரரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன்பின்பு அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. புகாரின் பேரில் அவரை தீவிரமாக தேடி வந்த நாசி கவுன்டி போலீசார், சியோசெட் பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் கார் பார்க்கிங் பகுதியில் இருந்த காரில் சடலமாக ஜாஸ்மினை மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி கென்னத் லேக் கூறுகையில், ஜாஸ்மின் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். காரில் விஷவாயு தாக்கி இறந்துள்ளார். தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது என்றார்.
ஜாஸ்மின் பெற்றோர் கூறுகையில், போலீசார் தற்போது காரை கண்டுபிடித்த இடத்தில் இதற்கு முன்பே தேடினர். அப்போது அங்கு கார் இல்லை. இப்போது எப்படி வந்திருக்க முடியும். இதில் ஏதோ மர்மம் உள்ளது. ஜாஸ்மினுக்கு எந்த மன அழுத்தமும் இல்லை. கல்லூரியிலும் தனது படிப்புக்காக பதிவு செய்து கொண்டிருந்தாள். ஜாஸ்மின் மரணம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். ஆனால், ஜாஸ்மின் கல்லூரிக்கே செல்லவில்லை என்றும் அவர் நடப்பு கல்வி ஆண்டில் தன்னை பதிவு செய்து கொள்ளவில்லை என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக