புதன், 12 மார்ச், 2014

கோச்சடையான்’ கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடிக்காமல் இருந்தாலே போதும். அதுவே ரசிகர்களுக்கு அவர் செய்யும் பெரிய உதவி.


kochadaiyaan-rajinikanth
சூப்பர் ஸ்டார் தீவிர சீக்காளியாக நடக்கக் கூட முடியாமல் இருந்தபோதுதான், ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு நடந்தது.
ஆனாலும் அவர் அந்தப் படத்தில் Action Hero வாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றனர்.
அப்படியானல் வழக்கத்தைவிட அதிகமாக ரசிகர்களை ‘கூமுட்டை’யாக்குவார்கள் என்று நினைத்தேன்.
அதுபோலவே அந்தப் படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் ரஜினி சாயலில் ஒருவர் நடித்திருக்கறார் என்பதாகவே இருந்தது. அதனால், ரஜினியின் பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூலை ‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், அதன் முன்னோட்டக் காட்சிகளை youtube ல் பார்த்த பிறகு, பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூல் சாதனையை ‘கோச்சடையான்’ முறியடிக்காது என்று முடிவானது;
காரணம், கோச்சடையானில் ரஜினி சாயலில் ஒரு பொம்மை நடித்திருக்கிறது.
ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்க தாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜியை போல் வயதானவராக இருந்து இளைஞனாக வேடம் போடும் முறையை தாண்டி; அடுத்தக் கட்ட வளர்ச்சிப்போல், இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு வயதான நோயாளி நடிக்காமலேயே இளம் மாவீரனைப் போல் மாயஜாலத்தில் மக்களை ஏமாற்றலாம் என்கிற முறை மிக மோசமான முன் உதாரணம்.
என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக்காசு
கொடுத்தது தமிழ் அல்லவா ! 
அவர் வியர்வை எல்லாம் சிந்தவில்லை. உண்மையில் அவரின் ஒவ்வொரு மணித்துளியும் ஆயிரமல்ல லட்சங்களுக்கு மேல் வியாபாரம் மதிப்பீடு உள்ளது. கணக்குப் பார்த்தால் தூங்குவதும் கழிவறைக்கு போவதும்கூட அவருக்கு வீணாக போகும் நேரங்கள்தான்.
அதனால்தான் தனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாதபோது பல மாதங்கள் வீணாக போகிறதே என்கிற புலம்பலில் பிறந்ததுதான் இந்த ‘கோச்சடையான்’
சீக்காளியாக இருந்த நாட்களைக் கூட பணமாக மாற்றுகிற ரஜினியின் பேராசையை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தன் இரண்டாம் மகளின் திருமணத்தின்போது நெருக்கடியின் காரணமாக, ரசிகர்களுக்கு பிரியாணி போடறதா சொன்ன வாக்குறுதியை காப்பாற்ற முடியாத ரஜினி,
என் உடல், பொருள், ஆவியை
தமிழுக்கும், தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா ?
என்று பாடியவர்தான்.
ஆமாம். ஆவியைதான் தமிழனுக்கு கொடுப்பார். பொருளை பொண்டாட்டிக்கும் புள்ளக்குட்டிக்கும்தான் கொடுப்பார்.
நோய்வாய்பட்டபோது ரஜினிக்காக அவர் ரசிகர்கள், தன் உயிரையும் உடலையும் தருகிற அளவிற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் இவரோ ஒரே ஒரு ‘குஸ்கா’ பொட்டலம் கொடுப்பதற்குக்கூட தயாராக இல்லை.
ரஜினி தன் ரசிகர்களுக்கு, ‘உடல் பொருள் ஆவி’ எல்லாம் தரத் தேவையில்லை. குறைந்த பட்சம் ‘கோச்சடையான்’ டிக்கெட் விலையை கூடுதலாக வைத்து,
கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடிக்காமல் இருந்தாலே போதும். அதுவே ரசிகர்களுக்கு அவர் செய்யும் பெரிய உதவி.mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: