புதுடில்லி, மார்ச் 12- பாரதீய ஜனதா
கட்சிக்குள் எங்குப் பார்த்தாலும்
உள் கட்சிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் கனவு என்னும் கப்பல் மூழ்கும் கப்பலாகி விட்டது என்று படம் பிடித்துள்ளது தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு.
உள் கட்சிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் கனவு என்னும் கப்பல் மூழ்கும் கப்பலாகி விட்டது என்று படம் பிடித்துள்ளது தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு.
தேநீர்க் கடை விவாதம் (சண்டை) கட்சித்
தலைமை அலுவலகத்தில் தீவிரமாக நடந்து கொண்டு இருக் கிறது. பாரதீய ஜனதா
கட்சி யின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமை யின் முடிவில் மிகவும்
அதி ருப்தியில் உள்ளார்.
முரளிமனோகர் ஜோஷி யின் நாடாளுமன்ற தொகு
தியான வாரணாசிமீது பார தீய ஜனதாவின் பிரதம ருக்கான வேட்பாளர் கண்
வைத்துள்ளார். தொடக்கம் முதலே இந்த தகவல் முரளி மனோகர் ஜோஷிக்குத்
தெரியவந்தாலும் அதை தலைமை தமக்கான தொகு தியை அவருக்கு ஒப்புக் கொள்ளாது
என்று நினைத்து வந்தார். ஆனால் இறுதியில் வாரணாசித் தொகுதியை
நரேந்திரமோடிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு முரளிமனோகர்
ஜோஷி தள்ளப்பட்டார்.
இதனால் விரக்தியடைந்த ஜோஷி கட்சியின் தலை மைக்குக்
கட்டுப்படுவேன் என்று கூறினாலும், தனக்கு நெருக்கமானவர்களிடம் வாரணாசி
தொகுதியில் நான் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு
ஏற்படும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் கூறிய தாவது:
தற்போதைய அரசியல் சூழலில் பாரதீய ஜனதா தலைமை கட்சிக்கும், கட்சியின் பிரதம
அமைச்சர் பதவி வேட்பாளராக இருக் கும் மோடிக்கும் பாதகம் ஏற்படும் முடிவை
கட்சி எடுக்காது என்று நினைக் கிறேன் என்றார்.
சில நாட்களாகவே பார தீய ஜனதா கட்சியில்
உட்கட்சிப்பூசல்கள் மெல்ல மெல்ல உருவாகிவிட்டன. முக்கியமாக கட்சியின் மூத்த
தலைவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற ஒரு வருக்காக பொதுக்கூட்டங் களில்
இரண்டாம் பட்ச நப ர்களாக நடத்தப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜோஷி போர்க்
கொடி!
முரளிமனோகர் ஜோஷி யைப் பொறுத்தவரை பார தீய
ஜனதா கட்சியின் முக் கியத்தூண்களின் ஒருவராக இருந்து வருகிறார். வார ணாசி
தொகுதியில் தொடர்ந்து பாரதீய ஜனதா சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று
வருகிறார். இந்தச் சூழ்நிலையை மனதில் வைத்து கடந்த இரண்டு முறை
வாரணாசியில் பொதுக் கூட்டம் நடத்திய நரேந்திர மோடி வேறு எங்கும் நின்று
பரிசோதனை செய்து பார்ப் பதைவிட பாதுகாப்பான வாரணாசித்தொகுதியில் நிற்பதே
தற்போது நல்லது என்று நினைத்துத் தலைமை யிடம் கூறினார். தலைமை யும் தற்போது
உள்ள அரசி யல் அழுத்தததின் காரண மாக நரேந்திரமோடி இந்த வாரணாசி தொகுதியில்
போட்டியிடும் முடிவை ஒப்புக்கொண்டு முரளி மனோகர் ஜோஷியிடம்
தெரிவித்துள்ளது, .
தலைமையிடத்தில் பொது விவாதம் வைக்கவில்லை
முரளி மனோகர் ஜோஷி யின் தொகுதியில்
நரேந்திர மோடி போட்டி இடுவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களான சுஸ்மா
சுவராஜ், அத்வானி மற்றும் லால்ஜிடண்டன் போன்ற வர்களிடம் விவாதிக்க வில்லை,
இதனால் கட்சித் தலைமையில் பெருத்த பிளவு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது.
நரேந்திர மோடி பிரதம ராக கட்சித் தலைமை அறி வித்ததில் இருந்தே மூத்த
தலைவர்களான அத்வானி, சுஸ்மா சுவராஜ் போன்ற தலைவர்கள் புறக்கணிக் கப்பட்டு
வருகின்றனர். இந்த நிலையில் மோடி யின் தொகுதித் தேர்வு பிரச்சனையும்
சேர்ந்து கொள்ள, தலைமையில் பிளவு கூடிக் கொண்டே வருகிறது.
தற்போது நாடு முழு வதும் ஏற்பட்டுள்ள அரசி
யல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். முக்கியமாக
பாஸ்வானுடனான கூட் டணியில் எந்த மூத்த தலை வர்களின் ஆலோசனையை யும்
பெறவில்லை, அதே போல் தொகுதிப்பங்கீட்டி லும் மூத்த தலைவர்களின் கருத்து
புறக்கணிக்கப்பட் டது. தற்போது பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ நாத் சிங்
தலையாட்டி பொம் மையாக மாறிவிட்டார்.
கர்நாடகாவில் எடியூ ரப்பா கட்சியில்
இணைந்த விவகாரம் குறித்து சுஷ்மா சுவராஜ் சமூகவளை தளத் தில் அதிருப்தி
தெரிவித் துள்ளார். சுஷ்மா சுவராஜ் நேரடி யாகவே பாரதீய ஜனதா கட்சித் தலைவர்
ராஜநாத் சிங் மீது குற்றம் சுமத்த ஆரம் பித்து விட்டார். சமூக வளை
தளத்தில் கட்சித்தலைவர் என்பவர் அனைத்து உறுப் பினர்களையும் ஒரேமாதிரி யாக
பாவிக்கவேண்டும் என்று மறைமுகமாக ராஜ நாத் சிங்கைக் குறிப்பிட் டுள்ளார்,
மாநிலத்தில் குடுமிப் பிடிச்சண்டை பாரதீய ஜனதா தேர்தல் வேலை
ஆரம்பித்ததில் இருந்தே மாநிலங்களிலும் உட்கட்சிச் சண்டை தீவிர மாக
துவங்கிவிட்டது.
சிவசேனா பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில்
மராட் டிய மாநில துணைப் பிரதமராக இருந்த கோபி நாத் முண்டே மற்றும் கட்
சியின் முன்னாள் தலை வரும் ஆர்.எஸ்.எஸ்சுக்குப் பிரியமான நிதின் கட்கரியும்
தற்போது பொது மேடை யிலேயே சண்டையிட ஆரம் பித்து விட்டனர். குறிப்பாக
மராட்டிய பாரதீய ஜனதா கட்சி கிழக்கு மேற்கு என இரண்டு பிரி வாக பிரிந்து
அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். நிதின் கட் கரி மீது
வருமானவரித்துறை குற்றம் சாட்டியதில் இருந்தே அவரை கட்சியின் முக்கிய
பதவியில் நீடிக்கவிடாது கோபிநாத் முண்டே தலை மைக்கு அடிக்கடி கடிதம் எழுதி
மிரட்டிவந்தார். இந்த சூழ்நிலையில் தான் நிதின் கட்கரிக்கு பாரதீய ஜனதா
கட்சித்தலைவர் பதவி மீண் டும் கிடைக்காமல் ராஜநாத் சிங்கின் கையில்
சென்றது, இதனால் கோபிநாத் முண்டே மீது கடுங்கோபத்தில் இருந்த நிதின் கட்கரி
மராட்டிய மாநில பாரதீய ஜனதா வேட் பாளர் தேர்வில் கைவைத் தார். கோபிநாத்
முண்டே யின் ஆதரவாளர்களில் பலருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல்
இருந்து தனக்கு ஆதர வானவர்களின் பெயர்களை மாத்திரமே அதிகம் பரிந் துரை
செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த கோபிநாத் முண்டே தலைமைக்கு எச்சரிக்கை விடும் தொனியில் கடிதம் எழுதியுள்ளார். ஆகையால் மராட்டிய மாநில வேட்பா ளர்கள் அறிமுகமாவது சிக்கலில் உள்ளது,
இதனால் அதிருப்தி அடைந்த கோபிநாத் முண்டே தலைமைக்கு எச்சரிக்கை விடும் தொனியில் கடிதம் எழுதியுள்ளார். ஆகையால் மராட்டிய மாநில வேட்பா ளர்கள் அறிமுகமாவது சிக்கலில் உள்ளது,
எடியூரப்பா ஒரு பிரச்சினை!
அதே போல் பிரிந்து சென்று மீண்டும்
கட்சியில் இணைந்த எடியூரப்பா அனைத்துத் தரப்பிலும் கட்சியினரிடம் தனது அதி
காரத்தை காட்டி வருகிறார். இது பாரதீய ஜனதா கர் நாடகத் தலைமையை
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது, கட்சித் தலைமையை மதிக்காமல் கட்சியை விட்டு
விலகி புதுக்கட்சி ஆரம் பித்து அது போணியாகாமல் மீண்டும் திரும்பி
கட்சிக்கு வந்தவருக்கு மோடி முக் கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன் காரண
மாக எடியூரப்பா தலைக் கனம் பிடித்து அலைகிறார். கட்சிக்காக சிரமமான
காலத்திலும் ஒன்றாக நின்று பாடுபட்ட நாங்கள் தற் போது கட்சிக்கு வேண்டாத
வர்களாக ஆகிவிட்டோம், எங்களின் ஆலோசனை களை யாரும் ஏற்பதில்லை என்று
கர்நாடகா பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய ஆதங் கத்தை
வெளிப்படுத்தினார். ஏற்கெனவே பஸ்வானு டனான கூட்டணி குறித்து பிகார் மாநில
பாரதீய ஜன தாவின் முக்கிய தலைவர்கள் எதிர்ப்புக் காட்டி வந்த நிலையில்
தற்போது மெல்ல மாநிலம் முழுவதும் உட் கட்சிப் பூசல் அதிக அளவில்
பெருகியுள்ளது.
இது தேர்தல் நெருங்க நெருங்க மேலும்
அதிகரிக் கும் என்றே தெரிகிறது. ஆட்சிக்கனவில் மிதந்து கொண்டு இருந்த
பாரதீய ஜனதா கப்பல் தற்போது உட்கட்சி சண்டை காரண மாக மெல்ல மெல்ல மூழ்
கிக்கொண்டு இருக்கிறது.
(தி எக்னாமிக் டைம்ஸ் 10.3.2014)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக