ஜெயலலிதா பிரசாரத்தை துவக்கும் முன்வரை, பிரதமர் கோஷத்தை எழுப்பி வந்தார். ஆனால், முதல் நாள் பிரசாரத்திலேயே, 'அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் அரசு, மத்தியில் அமைய வேண்டும்' என்றார். இப்போது, அ.தி.மு.க., கைகாட்டுபவரே பிரதமராக அமர முடியும் என்கிறார். அதேபோல, கருணாநிதி, 'மோடி என் நண்பர் என்றும், அவர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றுகிறார்' என்றும் கூறினார். இப்போது, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிறார். அவரது கூட்டணியிலேயே, இரண்டு மதவாதகட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை மறந்துவிட்டு பேசுகிறார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சேர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும், நாம் பாடுபடவேண்டும். ஸ்டாலினுக்கும், தே.மு.தி.க., பா.ஜ., கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டது. நம் கூட்டணியை பிரிக்க அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இணைந்து தீவிரமாக பணியாற்றுகின்றனர்; அவர்களின் முயற்சி பலிக்காது. இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக