செவ்வாய், 11 மார்ச், 2014

அழகிரி பற்றி நூல் எழுதியவருக்கு 'சீட்': ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி ! அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை':

மதுரை: 'அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்று நூல் எழுதி,
அழகிரி கையாலேயே வெளியிட்ட தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், விருதுநகர் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, கட்சியினரே எதிர்பாராத ஒன்று.தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க தலைவராக, 15 ஆண்டுகள் இருந்தார் ரத்தினவேலு. பின், சங்கத்தில் ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பிறகு, இவருக்காக 'முதுநிலை தலைவர்' பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவியை வகித்து வருகிறார். மதுரைக்கு 1980ல் அழகிரி அடி எடுத்துவைத்த நாள் முதல், ரத்தினவேலுடன் அறிமுகம் உண்டு. அவரின் நெருங்கிய வட்டத்தில் இல்லை என்றாலும், தி.மு.க., அனுதாபியாகவே இருந்தார் ரத்தினவேலு. அழகிரிக்கு 'ஆற்றலரசர்' என்ற பட்டத்தை கொடுத்தவர். ஸ்டாலின் ஒரு சராசரி காங்கிரஸ் அல்லது பாஜக தலைவர்களை போன்றே  காட்சி அளிக்கிறார் . திராவிட பாரம்பரியம் சுய மரியாதையை சமுக நீதி போன்ற கொள்கை விடயங்களில் வெறும் டம்மி பீசாக தான் ஸ்டாலின் இருக்கிறார்,எப்படி பார்த்தாலும் அழகிரி சற்று மேலானவராக தான் தெரிகிறார் . திமுகவை மீண்டும் ஒரு சுயமான அமைப்பாக மீட்டு எடுப்பதற்கு அழகிரியை விட்டால் யார் இருக்கிறார். பாவம் குஷ்புவும் ஒதுங்குகிறார் போல் தெரிகிறது 
இதற்காக, தி.மு.க., ஆட்சியில், சில பொறுப்புகள் தேடி வந்தன. 2009ல் மதுரை எம்.பி.,யாகி அழகிரி அமைச்சரானதும், சில மாதங்களிலேயே, நன்றி கடனை தீர்ப்பதற்காக ''அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தகம் எழுதினார் ரத்தினவேலு. அதில், முழுக்க முழுக்க அழகிரியின் நிர்வாகத்திறமை, தேர்தல் அணுகுமுறை, தொண்டர் பாசம் குறித்து பாராட்டி எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில், 'தான் நம்பிய, தன்னால் பயன்பெற்ற ஒருவர் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார் என்றால் சீறிப்பாயும் புலியாக மாறிவிடுவார். இவருக்கு(அழகிரி) முற்றிலும் பிடிக்காத வார்த்தை நம்பிக்கை துரோகம். வெள்ளை உள்ளம் கொண்ட இவரிடம் நண்பர்கள் போல் பழகி, நல்ல பயன்களை எல்லாம் அனுபவித்துவிட்டு, பின்னர் இவருக்கு துரோகம் செய்து, இவரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரை தெரியும்' என குறிப்பிட்டுள்ளார். புத்தகத்தில் பல இடங்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குணநலன்களையும், அழகிரியின் குணநலன்களையும் ஒப்பிட்டுள்ளார்.
அதில் எழுதியுள்ளதாவது: கருணாநிதியின் நினைவாற்றல் உலகறியும். கட்சி நிர்வாகிகள், அவர்களது செயல்பாடுகள், சாதனைகள், தவறுகள் அனைத்தும், அவரது மனக்கணினியில் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டவை. அதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல நம்மவர் (அழகிரி). டெலிபோன் டைரக்டரியை பார்க்காமல் 500 தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொண்டிருப்பவர். ''குழு உணர்வோடு செயல்பட்டு, தனக்கு கிடைக்கும் வெற்றியை, மற்றவர்களோடு பங்கிட்டால் தான் சாதனை படைக்க முடியும் என்ற உண்மையை கருணாநிதி, அழகிரி ஆகிய இருவரிடம் இருந்து தான் நான் கற்றுக்கொண்டு, கடைப்பிடித்து வருகிறேன்'' என, தனது பண்புகளுக்கு அழகிரியை உதாரணம் காட்டுகிறார், ரத்தினவேலு. அழகிரி மூலம் கருணாநிதிக்கு, 1996ல் அறிமுகமான ரத்தினவேலு, தி.மு.க., வில் முக்கிய பொறுப்புகள் வகிக்காத நிலையில், விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, அழகிரியே எதிர்பார்க்காதது. ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இது, அதிர்ச்சியை தந்துள்ளது.

இதனிடையே சில நாட்களுக்கு முன், மதுரை காமராஜ் பல்கலை செனட் உறுப்பினராக ரத்தினவேலுவை நியமித்து, கவர்னர் உத்தரவிட்டார். தி.மு.க., அனுதாபி, செனட் உறுப்பினர் ஆனது குறித்து, அ.தி.மு.க., சார்பு கல்வியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்பே, வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். dinamalar.com/

கருத்துகள் இல்லை: