ராய்ப்பூர்: தன் கணவனை இழந்து வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல்
தவிக்கும் விதவைகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை மீண்டும் மகிழ்ச்சிக்கு
உள்ளாக்க நேச்சர் கேர் சோசியல் வெல்பர் சொசைட்டி என்ற சமூக நல நிறுவனம்
ராய்பூரை சேர்ந்த, தைரியமாக விதவை ஒருவரை மணந்த இளைஞரை பாராட்டும் வகையில்
அவர்களுக்கு தேன்நிலவு சுற்றுலாவை பரிசாக அளித்துள்ளது. விதவைக்கு நீங்கள் மறுவாழ்வு
தந்தால்
அவர்கள் ராய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த தம்பதியினருக்கு 4
பகல், 3 இரவுகளுக்கான தேன்நிலவு சுற்றுலாவை இலவசமாக அளித்தனர்.அந்த
தம்பதியினர் ஆசியாவில் உள்ள 45 குறிப்பிட்ட இடங்களில் எதை வேண்டுமானலும்
தேர்ந்தெடுத்து கொள்ளலாம் தங்களது தேன்நிலவிற்கு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விதவை பெண்களை திருமணம் செய்ய முன் வரும் ஆண்களுக்கு, அவர்களின்
வெளிநாட்டு தேனிலவு பயணத்துக்கான செலவு முழுவதையும் ஏற்பதாக
அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதுமணத் தம்பதியர் ஐந்து நாட்கள்,
ஆசிய நாடுகளில், ஏதாவது ஒரு நாட்டிற்கு, தேனிலவு பயணம் மேற்கொள்ளலாம்.
அதற்கான, விமான டிக்கெட், தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும்
அந்த அமைப்பே ஏற்கும்.
இந்த அமைப்பின் இயக்குனர், வினிதா பாண்டே கூறியபோது," எங்களால் முடிந்த
அளவு இந்த சமூகத்துக்காக இது போன்ற சில நற்பணிகளை செய்து வருகிறோம்.
இத்துடன் விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக அந்த ஜோடிகளுக்கு
வேலைவாய்ப்பு, வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும்படி மாநில அரசுக்கு
கோரிக்கை வைத்துள்ளோம்" என்று அவர் கூறி
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக