இந்தியாவின் 21வது அணுமின் நிலையமான கூடங்குளத்தில் நேற்று பின்னிரவு முதல் மின் உற்பத்தி தொடங்கியது. இரவு 11.05
மணிக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் ரியாக்டரில் வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியதாக திட்ட இயக்குனர்
ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
மேலும், எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி இலக்கு எட்டப்பட்டதாகவும், மின் உற்பத்தி இயந்திரங்களின் அனைத்து செயல்பாடுகளும்
திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்திய அணுசக்தி கழக தலைவர் ஆர்.கே.சின்ஹா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கூடங்குளத்தின் முதல் உற்பத்தி
தொடங்கப்படுவதை நேரில் பார்வையிட்டனர்.
17 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ரஷ்ய தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின்
உற்பத்தி அளவு இன்னும் 30 - 45 நாட்களில் 400 மெகாவாட் அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், படிப்படியாக ஆயிரம் மெகாவாட்டாக மின் உற்பத்தி உயரும்போது தமிழ்நாட்டிற்குரிய பங்காக 463 மெகாவாட் மின்சாரம்
கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக